உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டு காவலில் காங்கிரஸ் நிர்வாகிகள்

வீட்டு காவலில் காங்கிரஸ் நிர்வாகிகள்

சென்னை:சென்னையில் நேற்று நடந்த 'கேலோ' விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சித்த காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து, வீட்டு காவலிலும் சிறை பிடித்து வைத்தனர்.சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்பு பலுான் மற்றும் கருப்புக் கொடி காட்டப்படும் என, தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், அவருடன், 30 பேரை, நேற்று முன்தினம் இரவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் போலீசார் கைது செய்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், திரவியம், டில்லி முன்னாள் மாவட்ட தலைவர் துரைராஜ் ஆகியோரை அவர்களின் வீட்டு காவலில் வைத்திருந்தனர்.இதனால், காங்கிரசாரின் கருப்புக் கொடி காட்டுவது, கருப்பு பலுான் பறக்கவிடுவது போன்ற சம்பவம் சென்னையில் அரங்கேறவிடாமல் தடுக்கப்பட்டது. போலீசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ