உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி மறு சீரமைப்பு; தமிழகத்துக்கு தண்டனை; விஜய் காட்டம்

தொகுதி மறு சீரமைப்பு; தமிழகத்துக்கு தண்டனை; விஜய் காட்டம்

சென்னை: லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்துக்கான தண்டனை என த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=98mel5tf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: வரும் ஆண்டிற்கு பிறகு தொகுதி மறுசீரமைப்புப் பணி, மத்திய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.

தண்டனை

கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழகம் மற்றும் இதர தென் மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம், பீஹார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மாற்றுக் கருத்து

பார்லிமென்டின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் கொண்டு வராமல், பார்லிமென்ட் உறுப்பினர்களை அதிகரிப்பதன் மூலம் மட்டும் எந்த ஒரு பலனும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஊழல் மலிந்த இன்றைய அரசியல் சூழலில், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைவானதாகவே உள்ளது என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. ஜனநாயகத்தைக் காக்க எந்த ஒரு செலவும் பெரிய செலவு அல்ல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆணி வேர்

இனியும் நீடித்தால் எந்த ஒரு பெரிய தீமையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை; இதுதான் இந்தியாவின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம் என்பதும் இல்லை. ஜனநாயகக் கோட்பாடுகளை உளமாரக் காக்க கீழ்க்கண்டவற்றைத் தான் செய்ய வேண்டும். ஜனநாயகத்தின் ஆணி வேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஆகும். தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்றால் தேர்தல் கமிஷனர்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

அணுகுமுறை

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் கூட்டணி மற்றும் தேர்தல் கணக்குகளை விடுத்து, பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டு வர வேண்டும். இன்றைய சூழ்நிலையில் மாநிலங்களுக்கு சுயாட்சியும், உரிய நிதிப் பகிர்வு மற்றும் நிதிச் சுதந்திரமும் வழங்குவதே இந்தியா என்ற கூட்டுக் குடும்பத்தை இன்னும் ஒற்றுமையானதாக நிலைத்திருக்கச் செய்யும் ஜனநாயக வழியாகும். மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும்.

ஒருமித்த கருத்து

தமிழகத்தின் நலனைக் காப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தீமையிலும் ஒரு நன்மை என்பது போல் இந்தத் தலையாய பிரச்னையில் தமிழகத்தின் நலனுக்காக யார் இருக்கிறார்கள். தமிழகத்தின் நலனுக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்த இது உதவட்டும். மத்திய அரசு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த மறுசீரமைப்பு பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

Karthik
மார் 05, 2025 20:37

பேசாம இந்த தீமூக பி டீம் பருத்தி மூட்டை கொடவுன்லேயெ இருந்திருக்கலாம். அரைச்ச மாவையே அரக்க புதுசா வந்த குட்ட கொழப்பி. தமிழ்நாட்டுக்கு ""இது தேவை இல்லாத ஆணி""


தாமரை மலர்கிறது
மார் 05, 2025 20:11

ஒன்னு ஆளும் ஸ்டாலினோடு போய் கம்யூனிஸ்ட் மாதிரி கட்சியை வித்துட்டு நில்லுங்க. இல்ல, பிஜேபி கூட நில்லுங்க. ரெண்டுக்கும் நடுவிலே நிக்காத. சீமான் சொன்ன மாதிரி தான் நடக்கும்.


MUTHU
மார் 05, 2025 18:54

நல்லவேளை ரஜினி அரசியலுக்கு வரவில்லை. தமிழர்களுக்கு இன்னும் காமெடியா இருந்திருக்கும்.


naranam
மார் 05, 2025 18:40

அந்தப் பாடகியின் மகளைக் சீரழித்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கொஞ்சம் ஜோசஃப் விஜய் கேள்வி கேட்கலாமே?


என்றும் இந்தியன்
மார் 05, 2025 17:46

நேற்று முளைத்த காளான் பார்க்க நன்றாக இருந்தாலும் அது விஷக்காளானா உண்பதற்கு ஏற்ற காளானா என்று தெரியாமல் உளறாதே


Youvaraj V
மார் 05, 2025 16:08

விஜய் மிகவும் அபாயகரமான அரசியல்வாதி. அவர் பின்னால் இருக்கும் கூட்டம் அப்படி.


Mani
மார் 05, 2025 15:44

Joker விஜய் அண்ட் stalin


HoneyBee
மார் 05, 2025 15:39

அட அறிவாலய டூப்பு ... உனககுனு சொந்த புத்தி இல்லயா. இதை சொல்ல தான் திராவிட மாடல் இருக்கே நீ எதுக்கு. சொந்தமாக கொஞ்சம் கூட அறிவு இல்லையா


jss
மார் 06, 2025 09:01

அறிவு இல்லாத்தால்தானே அரசுயலுக்கு வருகுறார். அண்ணமலையை தவுர்த்து இப்போது இருக்கும் அரசியல்வீதிகளுக்கு அறிவு கொஞ்சம் மந்தம், சிலருக்கு இல்லை, பலருக்கு இல்லவே இல்லை. இதில் விஜய் எந்த வகை என்பதை வாசகர்களாகிய் நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.


Krish
மார் 05, 2025 14:50

என்ன ப்ரோ, சும்மா பிகில் உடறீங்க. பக்கத்து எல பாயாசம் போல


M S RAGHUNATHAN
மார் 05, 2025 14:30

அரசியல் அறிவு துளியும் இல்லாத அரைவேக்காட்டு நபர் ஜோஸப் விஜய். யாரோ எழுதிக் கொடுத்ததை சினிமாவில் வருவதுபோல் ஏற்ற, இறக்கத்துடன் பேசுகிறார். எந்த ஒரு பிரச்சினையிலும் விஷய ஞானம் இல்லாத கூத்தாடி. புத்திசாலித்தனத்திற்கு சாட்சி சிங்கப்பூரில் g s t போன்று வரி விதிப்பே கிடையாது என்று உளறியவர். எதை எடுத்தாலும் பிஜேபி க்கு எதிரான நிலை எடுத்தாக வேண்டும் என்று இவருக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள் போலும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை