உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி மறுவரையறை விவகாரம்: மார்ச் 22ல் எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு

தொகுதி மறுவரையறை விவகாரம்: மார்ச் 22ல் எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து எதிர்க்கட்சி ஆளும் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் கூட்டத்திற்கு வரும் 22ம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என எழு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் முதல்வர்கள் சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மேற்கண்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தொகுதி மறுவரையறை நடக்குமா என்பதல்ல கேள்வி, ஆனால் அந்த மறுவரையறை எப்போது நடக்கும். அப்படி நடக்கும்போது, இந்திய நாட்டின் முன்னுரிமைத் திட்டங்களுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாநிலங்களின் செயலுக்கு மதிப்பளிக்கப்படுமா என்பதுதான் கேள்வி. நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல. தங்கள் தேசியக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இந்த தொகுதி மறுவரையறை அமைந்து அதன்மூலம், அம்மாநிலங்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைந்துவிடும் என்பதற்காகத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5u12s0u5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மக்கள்தொகை பெருக்கத்தைத் திறம்படக் கட்டுப்படுத்தியதற்காகவும், தேசிய வளர்ச்சி இலக்குகளை நிலைநிறுத்தியதற்காகவும் நம்மைப் போன்ற மாநிலங்களை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமைந்துவிடக்கூடாது. இதுகுறித்து நம்முடைய கவலைகளை நிவர்த்திசெய்யும் வகையில் ஒன்றிய அரசு தெளிவையோ அல்லது உறுதிப்பாட்டையோ அளிக்கவில்லை. மத்திய அரசின் பிரதிநிதிகள் தெளிவற்ற முறையில் வெற்று வாய்ச்சொற்கள் மூலம் எந்த மாநிலமும் அதன் தொகுதிகளை இழக்காது என்று கூறுகின்றனர். இதுபோன்ற தெளிவற்ற உத்தரவாதங்களை நாம் ஏற்கமுடியுமா? நமது மாநிலங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் போது, நம்முடன் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டாமா? இந்தப் பிரச்னை தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்று நம்புகிறேன். பார்லிமென்டில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் அதற்கான தீர்வுகளை நாம் இணைந்து உருவாக்கவேண்டும் . அதற்காக ஒரு கூட்டு ஆலோசனை மற்றும் ஒருங்கிணைந்த விவாதங்கள் மூலம் மட்டுமே, நமது பங்கை உறுதியளிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செயல்முறையைப் செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக, பின்வரும் இரண்டு கோரிக்கைகளை வைக்கிறேன்.1) தெற்கில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா; கிழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா; வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் (JAC) சேர தங்களின் முறையான ஒப்புதல். 2) கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் தங்கள் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமித்தல். முதல் கட்டமாக, மார்ச் 22, 2025 அன்று சென்னையில் ஒரு தொடக்கக் கூட்டத்தை நடத்த முன்மொழிகிறேன். நமது கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தருணத்தில் தங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன். நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும். மார்ச் 22, 2025 அன்று சென்னையில் தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

R.P.Anand
மார் 08, 2025 15:46

கூட்டு களவாணி எல்லாத்துக்கும் லெட்டர் போட்டாச்சு. இப்போ இருக்க எம்பி ய வச்சு நீ என்ன கிலிச்ச் ராசா


R.MURALIKRISHNAN
மார் 07, 2025 22:28

தலைவரே அப்படியே சீனா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் எல்லாருக்கும் லெட்டர் தமிழில் அனுப்புங்க. இதை விட்டா வேற வழியே இல்லை. நீங்க எல்லாத்திலேயும் பெயிலியர் ஆயிட்டிங்க.ஒரு வருவும் தான். அடுத்த வருடம் உங்களை பர்மெனன்டா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. ஏதேர சொல்லனும்னு தோணிச்சு. சொல்லிரோம். கெட் அவுட் ஸ்டாலின்


ஆரூர் ரங்
மார் 07, 2025 22:20

இதில் என்ன கூத்துன்னா.பெறுநர் திரு நவீன் பட்நாயக், ஒரிசா முதல்வர்ன்னு ஒரு அழைப்பு சென்றுள்ளதாம் . அவர் எதிர்க்கட்சித்தலைவராகி ஒரு வருஷ.மாகப் போகுது.


Amar Akbar Antony
மார் 07, 2025 21:54

உள்ளூர் சந்தையிலே விலை போகாத ஹிந்தி எதிர்ப்ப மடைமாற்றி கல்யாணம் ஆகாத பெண்ணிடம் குழந்தைக்கு அதுவும் ஆன் குழந்தைக்கு தான் பேர் வைக்கணும்னு அடம்பிடித்து பைத்தியக்காரனாக வாதிட்டுக்கொண்டிருப்பார்கள் எப்படியோ அப்படியே டாஸ்மாக் நாட்டின் முதல்வரும் தேடுகிறார் ஓடுகிறார் கூட்டத்தை கூட்ட இனி இலவசங்களையும் திருவாரூர் அடுத்த மாநிலங்களுக்கும். உமர் அப்துல்லா மோடியை தவிர வேரு யாராலும் இப்போதைய காஷ்மீர் பாக் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்றதால் அவரை மறந்துட்டார்.


orange தமிழன்
மார் 07, 2025 21:46

இப்ப PAN INDIA தான் வியாபார தந்திரம்.... சினிமாவை போல........கங்குவா மாதிரி ஆகிவிடும் இவரது முயற்சி.....


sankaranarayanan
மார் 07, 2025 21:30

இவர் ஏன் அகிலேஷ் யாதவ் காஷ்மீர் முதல்வர் ஜார்கண்ட் முதல்வர் லாலு பிரசாத் மாயாவதி உதவா தாக்கீரை பஞ்சாப் மான் முதலியவர்களை அழைக்கவே இல்லையே


ராமகிருஷ்ணன்
மார் 07, 2025 21:25

விடியாத விடியல் இந்த விஷயத்தில் அசிங்கபட போகுது. பிற மாநிலங்களின் முதலமைச்சர்கள் இவரின் அழைப்பை ஏற்க மாட்டார்கள்.


ஆரூர் ரங்
மார் 07, 2025 18:45

உ.பி யில் ஹிந்தியை கட்டாயமாக்கி ஆங்கிலத்தை கூட விருப்ப(ப்)பாடமாக அதாவது 0 வாங்கினாலும் பாஸ் என்று ஆக்கிய சமாஜவாதி உங்க கூட்டணிக் கட்சி. ஹிந்தி வாழ்க ஆங்கிலம் ஒழிக என்று உறக்ககூறி அமல்படுத்திய லாலு உங்க கூட்டணி முக்கியஸ்தர். இருவரிடமும் முன்கூட்டியே பேசி வைக்கவும்.( பசி கூட ஹிந்தியை வளர்க்க ஹிந்தியில் பேசி புகழ்ந்தார்)


raja
மார் 07, 2025 18:23

மேல் மாடியில் ஏதாவது இருந்தா தானே செய்ய முடியும்.. அங்கதான் காலியா இருந்ததால ஒட்டி வச்சி இருக்கோம்ல...


Shekar
மார் 07, 2025 18:14

கேரளா தவிர வேறு யாருக்கும் இப்போதைக்கு எலக்சன் இல்லை. அதனால் யாருக்கும் எந்த அவசியமும் இல்லை. தொகுதி மறு சீரமைப்பு அறிவிப்பே வராத போது எந்த அடிப்படையில் வருவார்கள். ஆந்திரா, தெலங்கானா முன்னாள்கள் பொழுது போக்க வரலாம்.


சமீபத்திய செய்தி