உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 95 ராஜகோபுரங்கள் கட்டுமானம் ரூ.125 கோடியில் நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

95 ராஜகோபுரங்கள் கட்டுமானம் ரூ.125 கோடியில் நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ''தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பின், இதுவரை 95 கோவில்களில், 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன,'' என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம், கோவில்கள் தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்தார்.அவருக்கு பதிலளித்த, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ''மேட்டூர் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு, 1.20 கோடி ரூபாய் செலவில், மூன்று நிலை ராஜகோபுரம் அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு உள்ளது. ஆணையருடைய பொது நல நிதியை பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் இல்லை.''அதிக வருவாய் உள்ள வேறு கோவிலில் இருந்து கடனாக பெற்று, ராஜகோபுரம் அமைக்கும் பணி வெகு விரைவில் துவங்கப்படும். ''இந்த ஆட்சி ஏற்பட்ட பின், இதுவரை 95 கோவில்களில் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன.''அது மட்டுமின்றி, 350 ராஜகோபுரங்களுக்கான மராமத்து பணிகள், 83 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. ''மேட்டூர், மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோவில் புனரமைப்பு பணிகள், 4 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. ஜூலை மாதம் கும்பாபிேஷகம் நடத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

vbs manian
மார் 27, 2025 11:35

தர்ம சாஸ்திரங்கள் வேதம் உபநிஷத் சத்தியம் என்றால் இவர்களுக்கு நரகமே.


ஏ வ பாலு, திருவண்ணாமலை
மார் 27, 2025 11:26

அதுல பங்கு எவ்வளவு மிஸ்டர் முன்னாள் ஹிஸ்டரி ஷீட்டர் .


Dharmavaan
மார் 27, 2025 11:15

இதுயாருடைய பணம் என்பது தெரிய வேண்டும் உபாயதரர்களா ,கோயில் வருமானமா என்று


Satish NMoorthy
மார் 27, 2025 11:06

What is the cut for you in this Rs 125 crores


venkates
மார் 27, 2025 10:24

பக்தர்களிடம் வசூல் செய்து ,,இவர்கள் ஆளும் மன்னர்களின் விளம்பரம் மட்டுமே


Kumar Kumzi
மார் 27, 2025 09:59

அப்போ இந்த நாலு வருசமா என்ன செஞ்சிட்டு இருந்திங்க அதுசரி சின்னவருக்கு கொட புடிக்கவே நேரம் இருந்திருக்காது எப்படியோ ஆட்சி போகுமுன்னே கோவில் பணத்தை கொள்ளையடிக்க திட்டம்


மதிவதனன்
மார் 27, 2025 09:20

நல்லது செய்யுங்கள் அந்த கடவுளே கழக அரசை காப்பாத்துவார், இது வரை எந்த அரசும் கடவுளுக்கு இவ்வளவு செய்தது இல்லை, கடவுள் துணை உண்டு நிச்சயம் வெற்றி உங்களுக்கே


vijai hindu
மார் 27, 2025 11:03

கடைசி காலத்துல புண்ணியத்தை செய்துவிட்டு போங்க ஆட்சிக்கு வராத இருப்பது நல்லது தமிழ்நாட்டுக்கு செய்யும் நன்றி கடன்


vbs manian
மார் 27, 2025 09:12

வெறும் விளம்பரம். வெளியில் கோடி கோபுரம் கட்டலாம். யார் கான்ட்ராக்ட் உள்ளே என்ன நடக்கிறது. குடி கொண்டிருக்கும் அந்த இறைவன் உதாசீனம். பூஜையில் மொழி மூக்கை நுழைகிறது. பூஜை பக்தனின் தனி உரிமை சுதந்திரம் பணி செய்யும் அர்ச்சகர் வயிற்றில் ஈர துணி. அரசு அதிகாரம் பரம்பொருளுக்கு முன் அகங்கார நடை போடுகிறது. வெற்று பூக்கூடைக்கு பட்டுத்துணி போர்த்துகிறார்கள்.


Venkatesan Srinivasan
மார் 27, 2025 08:58

இதற்கு ஒரு மந்திரி தேவையா? அரசு வரி பணத்தில் நடக்க வேண்டிய இந்து சமய அறங் கெடுக்கும் துறை அரசு அலுவலகங்கள் இந்து பக்தர்களின் உண்டியலில் போடும் காணிக்கையில் நடத்தப்படுகிறது. இந்து கோவில் நிலங்கள் சொத்துகள் தாராளமாக பொதுப் பயன்பாடு என்ற பெயரில் அறங்கெடுக்கும் துறை மூலம், இந்து பக்தர்களின் நம்பிக்கை பக்தி அடிப்படையில் எந்த பயன்பாடு கருதி கோவில்களுக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டதோ அதற்கு விரோதமாக கட்டாய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிறது. இந்த அக்கிரமங்களை செயல்படுத்த ஒரு இந்து சமய அறங் கெடுக்கும் துறை. மந்திரி அலுவலகங்கள் ஊழியர்கள் சம்பளம் இதர படிகள் பலன்கள். அதுவே இஸ்லாமிய கிருத்துவ மத உள் விவகாரங்களில் வழிபாடுகளில் பணம் காணிக்கை சொத்துகளின் மீது எந்த அதிகாரமும் கட்டுப்பாடுகளும் இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படாது. இதுதான் நம் நாட்டின் "மதச்சார்பின்மை" கொள்கை. "இந்து மதச்சார்பின்மை - இந்து கோவில் சொத்துகள் துஷ்பிரயோகம்.


KRISHNAN R
மார் 27, 2025 08:47

கடவுள் காப்பாற்றுவாராக


சமீபத்திய செய்தி