உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோர்ட் உத்தரவை மீறி கட்டுமான பணி: தி.மலை கோவிலில் நீதிபதிகள் ஆய்வு

கோர்ட் உத்தரவை மீறி கட்டுமான பணி: தி.மலை கோவிலில் நீதிபதிகள் ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவை மீறி நடக்கும் கட்டுமான பணிகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு நேற்று ஆய்வு செய்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிழக்கு பகுதி ராஜகோபுரம் எதிரே, 6.40 கோடி ரூபாய் செலவில் அடுக்கு மாடி வணிக வளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை' நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், கடந்த 25ம் தேதி, மனுதாரர் ரமேஷ் ஆஜராகி, கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்தும், பணி நடப்பதாக கூறி, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து நீதிபதிகள், 'கோவிலில் அக்., 5ம் தேதி, நாங்களே ஆய்வு செய்வோம்' என அறிவித்தனர். இதன்படி நீதிபதிகள் சுரேஷ்குமார், சவுந்தர் ஆகியோர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று மதியம் வந்து, பல மணி நேரம் ஆய்வு செய்தனர். இதில் கோவில் நான்காம் பிரகாரத்தில், யானை கட்டும் மண்டபம் அருகே, மதில் சுவரை ஒட்டி கட்டப்படும் பக்தர்களின் தங்கும் அறை அவசியமற்றது எனக்கூறி கட்டுமானத்தை நிறுத்த உத்தரவிட்டனர். பிறகு, கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 06, 2025 08:20

திராவிட மாடல் நீதியையோ, மரபையோ மதிக்கதாக சரித்திரம் இல்லை.... மிதித்ததாகவே வரலாறு சொல்கிறது .......


Kasimani Baskaran
அக் 06, 2025 04:02

பக்தனல்லாத கண்டவர்களும் கோவில் நிர்வாகத்துக்குள் வந்தால் கோவில்கள் நாசமாக்கப்படும் என்ற அடிப்படை கூட தெரியாத நீதிமன்றத்தை நினைத்து வெட்கப்படுவதா அல்லது இவர்களை ஆட்சியில் அமரவைத்து அழகுபார்க்கும் சிறுபான்மை தந்திகளை சொல்வதா..


Ramesh Sargam
அக் 06, 2025 01:04

இது போன்று மற்ற கோவில்களை ஆக்கிரமித்து கட்டப்படும், கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களை இடித்து அகற்றவேண்டும். சிவன் சொத்து கொலநாசம்.


சமீபத்திய செய்தி