உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் ஜூலை 21ல் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டுள்ளார். அரசு பணியில் இருப்பவர்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது குறித்த வழக்கை 2023ல் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கருணை அடிப்படை பணி நியமனத்துக்கான நடைமுறை சிக்கல்களை களைவதற்கும், இதற்கு கால நிர்ணயம் செய்யப்படவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.எனினும், இது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற நிலையில், நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில், 2023 முதல் தற்போது வரை தலைமை செயலாளர்களாக இருந்தவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டார்.வழக்கு ஜூலை 21க்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.இதன்படி தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் ஜூலை 21ல் நேரில் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GMM
ஜூன் 20, 2025 14:10

தலைமை செயலர் ஆஜர் ஆகும் முன் அரசு வேறு செயலர் நியமிக்க வேண்டும். தலைமை அதிகாரியை அவமதிப்பு என்று நீதிபதி ஆஜர் படுத்த தீர்வு சொல்வது சரியல்ல. 21 சனி விடுமுறை. கைது செய்ய கூட முடியும். ஆஜர் ஆகவில்லை என்றால் தீர்வை அமுல் படுத்தும் அதிகாரம் மாநில அளவில் யாருக்கும் இல்லை.? நிர்வாகம் மீது நீதிமன்றம் ஆதிக்கம் செலுத்துவதை கவர்னர், சட்டபேரவை நிறுத்த வேண்டும். லட்ச கணக்கான மக்களுக்கு குறை இருக்கும். ஆனால் தலைமை செயலர் ஒருவர் தான்.


SUBBU,MADURAI
ஜூன் 20, 2025 18:32

உத்தரவிட்டது யாரு சென்னை உயர்நீதிமன்றமா அப்ப சரி....


sundarsvpr
ஜூன் 20, 2025 13:21

தலைமை செயலாளர் அரசு ஊழியர். அரசியல் சாசன விதிகளின்படிதான் செயல்படவேண்டும். அரசு அமைச்சர்கள் ஒரு தவறான உத்தரவு கூறினாலும் விதிகளுக்கு புறம்பாய் இருப்பின்செயலர் சுட்டிக்காட்டவேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதனை மக்களும் அறிவர். நீதிமன்றமும் அறியும். இந்த அவமதிப்பு வழக்கில் உரிய அமைச்சர்கள்களை செயலர்கள் சந்தித்து பேசவில்லை என்பதனை நீதிமன்றம் உறுதிசெய்யவேண்டும்.


நிவேதா
ஜூன் 20, 2025 13:15

உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் ஒரே நாட்டின் சட்டதிட்டங்கள் படி உள்ளதா என தெரியவில்லை. சாமானியர்களால் நெருங்க முடியாத உச்சத்தில் உச்சநீதிமன்றம் உள்ளது. பணம் செல்வாக்கு படைத்தவர்களின் கோர்ட்டாக அது மாறிவிட்டது என்பதே கசப்பான உண்மை. அங்கு போனால் தேவைப்பட்டால் மக்களையும் மிரட்டலாம், முதலாளிகளையும் மிரட்டலாம், செல்வாக்கு இருந்தால் முதல்வர், கவர்னர், பிரதமர், ஜனாதிபதி எல்லாரையும் மிரட்டலாம். Parallel Universe கதைகள் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும்.


Ramesh Sargam
ஜூன் 20, 2025 13:12

நீதிமன்றத்தையே மதிக்கத்தெரியாத ஒருவரை தலைமை செயலாளராக தேர்ந்தெடுத்த தமிழக முதல்வரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை