உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடரும் பிரச்னை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் 20 நிமிடம் சிசிடிவி செயல்படவில்லை

தொடரும் பிரச்னை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் 20 நிமிடம் சிசிடிவி செயல்படவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று (மே 3) காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.நீலகிரியில், திருப்பூர், ஈரோடில் சமீபத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் எழுந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும் சிறிது நிமிடங்களில் அது சரிசெய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் வேலை செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையின் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இன்று காலை 9:28 முதல் 9:48 மணி வரை சிசிடிவி ஆப் ஆனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் புகாரளிக்க முடிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

M Ramachandran
மே 03, 2024 20:15

தில்லுமுல்லு கடைய்யசி நேரத்தில் ஒரு தகுடு தித்தம் முயற்சி கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களை நீக்கி மகிழ்ச்சி சென்னையிலும் இந்த தகிடு நித்தம் நடந்துள்ளது அடுத்த முயற்சியை மின்சாரத்தியய நிறுத்தி வேடிக்கை காட்டுவது


Godfather_Senior
மே 03, 2024 20:11

தில்லுமுல்லு கழகங்களை தவிர, வேறு எந்த கட்சிக்கும் இம்மாதிரி திருட்டு வேலை செய்யும் தகுதி அல்லது ஊழியர் சப்போர்ட், போலீஸ் சப்போர்ட் கிடையாது Needle of suspicion is directly pointing the present rulers in TN No way any other gang can do such sort of immoral acts


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 03, 2024 19:21

இந்த வேலை செய்வது தமிழக உளவுத்துறையாகத்தான் இருக்கும் வாக்கு பதிவு பிந்தைய திமுகவின் நிலை மற்றும் மற்ற கட்சிகளின் நிலை அறிந்து உளவுத்துறை முதல்வருக்கு ரிப்போர்ட் தர வாக்கு பதிவு இயந்திரத்தில் கை வைத்து இருப்பார்கள்


Anbuselvan
மே 03, 2024 19:06

எங்கே எங்கே ஆளும் கட்சி தோல்வியை தழுவ கூடிய வாய்ப்பு உள்ளதோ அங்கே எல்லாம் இம்மாதிரி நடக்கிறதோ என மக்களுக்கு சந்தேகம் எழும் வகையில் உள்ளது


சி சொர்ணரதி
மே 03, 2024 18:48

எலி கதை தான் இது, இவர்களுக்கு இது ஒன்றும் புதுசு இல்லை. கரையான் கதைகள், கூவத்தில் முதலை கதை தான்.


vijay s
மே 03, 2024 18:43

சரியாக சொன்னிர்கள்


கத்தரிக்காய் வியாபாரி
மே 03, 2024 18:12

மாடல் அழகர்கள் கய் வைத்து விட்டார்களா?


J.V. Iyer
மே 03, 2024 17:17

எல்லோருக்கும் சந்தேகம் வருவது இந்த மாடல் கட்சிமேல்தான்


Dharmavaan
மே 03, 2024 16:57

இதெல்லாம் திமுகவின் சதி வேலை கலெக்டர் ஒத்துழைப்புடன் திருடர்கள் எதனை பேட்டி மாற்றினாரோ அதற்குள் இன்னும் எதனை வேலை செய்யாமல் போகுமோஇந்த புகார் வந்தால் எதிர் கட்சிகள் மறு வாக்கு பதிவு கோர வேண்டும்


அசோகன்
மே 03, 2024 16:34

இதுவே பழைய type ஓட்டு பெட்டியாக இருந்திருந்தால் திருட்டு திமுக பெட்டிகளை எளிதில் மாற்றி வைத்திருப்பார்கள்....... evm ஐ புதிதாக வைக்கமுடியாது இருப்பதை எடுத்தேறியலாம் ஆனா அது திமுக ஒட்டா மத்தவங்க ஒட்டான்னு தெரியாது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி