மேலும் செய்திகள்
கேள்வி மேல் கேள்வி
13-Apr-2026
இலை கட்சி தலைவர், களத்தில் மக்கள் மத்தியில் தன் தேர்தல் பிரசாரம் வெகுவாக எடுபட்டிருக்கிறது என, சந்தோஷமாக உள்ளாராம். அதனால், வியூக டீமின் ஒப்பந்தத்தை தேர்தலுக்கு பின்பும், சில காலம் வரை நீடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், ஆட்சியில் செயல்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பவே யோசியுங்கள் எனவும் தலைவர் சொல்ல, அந்தப் பணியில் களம் இறங்கி இருக்கிறதாம் வியூக டீம். நம்பிக்கையில் நாட்டாமை 2. நாட்டாமை நடிகர், சில நாட்களுக்கு முன் தாமரை கட்சியில் தனக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை என பொருமித் தீர்த்ததோடு, கட்சித் தலைமைக்கு கடிதமும் அனுப்பினார். கூடவே, முன்னாள் தலைவரான மலையானவருக்கும் விஷயத்தைச் சொல்ல, அவர் தலைமையிடம் பேசி, நடிகரிடம் தலைவர்களை பேச வைத்தாராம். அதையடுத்து சமாதானமான நடிகர், 'தேர்தலுக்கு பின் எனக்கு நல்லதே நடக்கும்' எனச் சொல்லி, பிரசாரத்தில் வலம் வருகிறாராம். அணிமாறும் பேச்சு 3. இதுநாள் வரை, சூரிய கட்சிக்காக சொம்பு துாக்கித் திரிந்து கொண்டிருந்த யு டியூப் பேச்சாளர்கள், ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றனராம். அதில் ஒரு சிலர், கட்சித் தலைமையை கடுமையாக விமர்சிக்கத் துவங்கி உள்ளனராம். 'எதற்காக இப்படி கட்சி மாறியுள்ளனர்?' என விசாரித்தால், அவர்களுக்கு கிடைத்திருக்கும் ரகசிய தகவல் தானாம். 'தேர்தலில் சூரிய கட்சிக்கு சாதகமான நிலை இல்லை' என கிடைத்திருக்கும் அந்த தகவலையடுத்தே மனதில் மாற்றமாம்.
13-Apr-2026