உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர் விடுமுறை: சொந்த ஊர் கிளம்பிய மக்கள்

தொடர் விடுமுறை: சொந்த ஊர் கிளம்பிய மக்கள்

சென்னை: தொடர் விடுமுறையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் புறப்பட்டு சென்றனர். இதனால், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது.இன்று சுதந்திர தினம் விடுமுறை. நாளை வெள்ளி கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்தால், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருகிறது. எனவே, சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பயணியரின் தேவைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் இருந்து நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு சென்றதால், தாம்பரம், பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், பயணியர் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு நேற்று 450க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல், வரும் 16, 17ம் தேதிகளிலும் 365 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோல், கோயம்பேட்டில் இருந்தும், மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விமான கட்டணம் உயர்வு

விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து கோவை, மதுரை, சேலம், துாத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, சென்னை-யில் இருந்து துாத்துக்குடி செல்லும் விமான கட்டணம் 13,825 ரூபாயாகவும், மதுரைக்கு 17,865 ரூபாயாகவும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
ஆக 15, 2024 20:00

தலைநகரை மட்டுமே மையப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சி இருந்தால் இப்படித்தான்.... இந்த கும்பலுக்கு சொந்த ஊரில் போய் அலப்பறை அரை டிராயரோடு செல்ஃபி எடுத்து போடவேண்டும்... அவ்வளவு தான்...


கனோஜ் ஆங்ரே
ஆக 15, 2024 12:48

இப்படி போறவனுங்க கிட்ட ஒண்ணே ஒண்ணைத்தான் கேக்குறேன்... “பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா...இந்த தீப்பந்தம், தீவட்டி, ராந்தல் விளக்கு இதெல்லாம் வேணாமா...?” ஏன், இந்த நாலு நாள சாதாரண நாள்ல லீவ் போட்டுட்டு போக வேண்டியதுதானே... கிறுக்கனுங்க.


அப்பாவி
ஆக 15, 2024 10:40

மெட்ராசைக்.கெடுத்தவங்க சொந்த்ச் ஊரில் குப்பை போட்டு ஒரு வழி பண்ணிடுங்க.


gopi
ஆக 15, 2024 10:17

என்னமோ நாளைக்கே உலகம் அழிஞ்சிடும் போல அடிச்சு பிடிச்சு ஒடுறானுங்க...


Muguntharajan
ஆக 15, 2024 09:32

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் இந்த காட்சிகள் மட்டும் எப்போதும் மாறுவதே இல்லை. இதற்கெல்லாம் எப்போது விடிவு காலம் வருமோ?


VENKATASUBRAMANIAN
ஆக 15, 2024 07:10

விமான கட்டணமும் ஆம்னி பஸ் மாதிரி ஆகிவிட்டது. விடுமுறை என்றால் ராக்கெட் வேகத்தில் ஏறிவிடும்


Kasimani Baskaran
ஆக 15, 2024 05:25

சிங்கப்பூர் இந்திய கட்டணத்தை விட சென்னை தூத்துக்குடி விமானமக்கட்டணமா பகற்கொள்ளை போல இருக்கிறது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி