உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபரேஷன் சிந்தூரில் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் பங்களிப்பு பெருமையளிக்கிறது; அஜித் தோவல்

ஆபரேஷன் சிந்தூரில் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் பங்களிப்பு பெருமையளிக்கிறது; அஜித் தோவல்

சென்னை: இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறும் வெளிநாட்டு ஊடகங்கள், சேதமடைந்த பகுதிகளின் ஒரு போட்டோவை காட்ட முடியுமா? என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சவால் விடுத்துள்ளார். ஐ.ஐ.டி., சென்னையில் நடந்த 62வது பட்டமளிப்பு விழாவில் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mvnl70ny&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். இங்கே ' ஆபரேஷன் சிந்தூர்' பற்றியும் குறிப்பிட வேண்டும். இதில், உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் பங்களிப்பை நினைத்து பெருமையடைய வேண்டும். பாகிஸ்தான் உள்ளே 9 பயங்கரவாத இலக்குகளை தாக்க திட்டமிட்டோம். எல்லைப் பகுதிகளில் அல்ல. ஒரு இடத்தையும் தவறவிடாமல், திட்டமிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கினோம். முழு நடவடிக்கையும் 23 நிமிடங்களில் முடிந்தது. இந்தியாவுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதைக் காட்டும் ஒரு புகைப்படம் கூட இல்லை. நியூயார்க் டைம்ஸ் போன்ற வெளிநாட்டு ஊடகங்கள், மே 10ம் தேதிக்கு முன்பு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானத் தளங்களின் புகைப்படங்களை காட்டின. பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கும் திறன் நமக்கு உள்ளது.https://www.youtube.com/embed/lpeNYXHDsgEநமது நாகரிகத்தையும், தேசத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்க, நமது முன்னோர் எவ்வளவு அவமானங்கள், இழப்புகள், சிரமங்களை அனுபவித்தார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. நாடு என்பதும், அரசு என்பதும் வேறு. இந்தியா ஒரு நாடாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது ஒரு அரசாக புதியதாக இருக்கலாம். இன்னும் 22 ஆண்டுகளில் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறோம். அப்போது நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பீர்கள்.

ஆதாரம் உண்டா

பாகிஸ்தான் அதைச் செய்தது, இதைச் செய்தது என வெளிநாட்டு பத்திரிகைகள் தெரிவித்தன. இந்திய உள்கட்டமைப்புக்கு எந்த சேதம் அல்லது ஏதாவது ஓரு கண்ணாடி உடைந்துள்ளது என ஒரு புகைப்படத்தையாவது காட்ட முடிந்ததா? அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களில் பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்கள் தாக்குதலுக்கு முன்பும், தாக்குதலுக்கு பின்பும் இருந்தது தெரியவந்தது. பாகிஸ்தானுக்கு சேதம் ஏற்படுத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூலை 11, 2025 20:35

பெருமை. தேசப்பற்று உள்ளவர்களுக்கு மட்டும்தான். நம் நாட்டில் இருந்து கொண்டு, நம் நாட்டு உணவை திண்ணும் தேசதுரோகிகளுக்கு பெருமை இல்லை. அவர்கள் பேசாமல் இந்தியாவை விட்டு, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்லலாம். ஆனால் செல்ல மாட்டார்கள். ஏன் என்றால், இந்தியாவில் உள்ள பாதுகாப்பு அங்கு கிடைக்காது.


Palanisamy Sekar
ஜூலை 11, 2025 15:57

ஒலியின் வேகத்தை மிஞ்சும் வகையில் ஏவுகணைகள், ராடாரில் சிக்காமல் லாவகமாக பாய்ந்துசென்று தாக்கும் ஆகாஷ் போன்ற நமது நாட்டின் தயாரிப்பும், நன்கு பயிற்சி பெற்ற தேசபக்தி மிகுந்த விமானிகளும் படை வீரர்களும் என்று ஒருபுறம் நாடே கொண்டாடினாலும் நம்ம அஜீத் தோவல் போல ஒரு அறிவுமியக்க ஆற்றல் மிக்க தேசபக்தியுள்ள மனிதரை உலகத்தில் எங்குமே காணவே முடியாது. கனடா நாட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதியை கத்தியின்றி ரத்தமின்றி அதே நாட்டில் இங்கிருந்தே போட்டுத்தள்ள திட்டம் வகுத்து தந்த இவருக்கு எந்த நாட்டு ஆயுதமும் நிகராகாது. பாகிஸ்தானிலும் அப்படித்தான்..இங்கிருந்தபடியே பாகிஸ்தான் நாடே குழம்பி இருக்கும் தீவிரவாதியை போட்டுத்தள்ளியது கூட இவரது சாணக்கிய மூளை என்பதை இந்த உலகமே அறியும். செந்தூர் ஆப்ரேஷன் திட்டம் ஒருபுறம் வியக்கும் வண்ணம் இருந்தாலும்..தீவிரவாதிகளை சப்தமின்றி போட்டுத்தள்ளும் இவரது ஆற்றலை என்னென்பது