மேலும் செய்திகள்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 5வது நாளாக சென்னையில் நீடிப்பு
1 hour(s) ago | 1
கஞ்சா புழக்கம்; உண்மையை மறைக்கிறாரா அமைச்சர்?
2 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்-16
4 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில், போலி மருந்து விவகாரத்தை தொடர்ந்து, 34 வகையான மருந்துகளை மறு உத்தரவு வரும் வரை, விற்க தடை விதித்து, 161 மருந்தகங்களுக்கு, மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஆக்ராவில் நடத்திய சோதனையில், போலி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவை புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து சன்பார்மா என்ற நிறுவனம் அளித்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த போலி மருந்து விவகாரம், தற்போது சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்றி, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போலி மருந்து விவகாரத்தை தொடர்ந்து, மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் குழுவினர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 1,200 மருந்தகங்களில் உள்ள மருந்துகள், அதன் பேட்ஜ் மற்றும் காலாவதி விபரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதில், இதுவரை நடத்திய சோதனையில் 161 கடைகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனையில் சிக்கிய 34 வகையான போலி மருந்துகள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 34 வகையான மருந்துகளை, மறு உத்தரவு வரும் வரை விற்பனை செய்ய தடை விதித்து மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை, புதுச்சேரியில் உள்ள 150 மற்றும் காரைக்காலில் 11 மருந்தகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், பிற மருந்தகங்களில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
1 hour(s) ago | 1
2 hour(s) ago
4 hour(s) ago