உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஸ்துாரியை நவ.,29 வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு!

கஸ்துாரியை நவ.,29 வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தெலுங்கர்கள் குறித்து அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை கஸ்தூரிக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையிலான, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், கடந்த நவ., 3ம் தேதி பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நடிகை கஸ்துாரி பேசும்போது, தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bsy4thli&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் பின் அவர் 'தெலுங்கு மக்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. என் பேச்சை திரும்பப் பெறுகிறேன்' என்று மன்னிப்பு கேட்டார். எனினும், அவர் மீது வெவ்வேறு இடங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தெலுங்கு அமைப்புகளைச் சேர்ந்தோர் அளித்த புகாரில், சென்னை எழும்பூர், மதுரை திருநகர் போலீஸ் நிலையங்களில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவாகி இருந்தார். முன்ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்துாரி நேற்று கைது செய்யப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (நவ.,17) ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்து செல்லப்பட்ட போது, 'அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்' என கோஷம் எழுப்பினார் கஸ்தூரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

ஜெய்ஹிந்த்புரம்
நவ 23, 2024 02:48

பெருமாளே இவள் பாத்ரூமில் வழுக்கி விழாமல் இருக்கணும்.


vbs manian
நவ 18, 2024 09:03

சம்பவாமி யுகே யுகே என்று கிருஷ்ணன் சொன்ன தருணம் வந்துவிட்டது.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 01, 2024 07:15

இவா லண்டனுக்கு ஓடி போக போகிறாளா ?


theruvasagan
நவ 18, 2024 08:53

வடநாட்டவர்களைப் பற்றி இவனுக பேசின அநாகரிக பேச்சுகளுக்கு வட மாநிலங்களிலே இவங்க பேர்ல டஜன் கணக்குல கேசை போட்டு கோர்டுக்கு இழுக்கலாமே..


ஜெய்ஹிந்த்புரம்
நவ 23, 2024 02:41

போடேன் .. எதுக்கு புலம்பிக்கிட்டு இருக்கே..


raman
நவ 18, 2024 08:30

நீதிமன்றங்கள் இதற்கு நீதி என்ற காவல் எதற்கு என்று கேட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் ஆஜராகவேண்டும் என்று சொல்லலாம் அல்லவா


Ganapathy
நவ 17, 2024 22:17

வேங்கைவயலில் குடிநீரில் மனிதகழிவை கலந்தவனை கண்டுபிடிக்க முடியாத தமிழக போலீஸ் தெலுங்கானா சென்று உண்மையை உரத்தகுரலில் சொன்ன கஸ்தூரியை கைது செய்துள்ளது


ManiK
நவ 17, 2024 22:11

பிராமண சமுதாயத்திற்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு மிரட்டல் கொடுக்கவே கஸ்தூரி கைது, அர்ஜுன் சம்பத் மகன் கைது எல்லாம். திமுக, திக பிடியில் போலீஸ்.


ManiK
நவ 17, 2024 22:01

ஸ்டாலின், உதயநிதி செய்யும் கேவலமான அரசியல், அராஜகம், அடக்குமுறை- மக்களுக்கு வெட்டவெளிக்கமாக தெரிகிறது. அவர்களின் தெலுங்கு பாசம் திகட்டுகிறது.


Subramanian N
நவ 17, 2024 21:46

கொலையும், கொள்ளையும் செய்த திராவிட மாடல் மந்திரிகள் வெளியில் சுதந்தரமாக சுற்றி திரியும் இந்த தமிழ்நாட்டில் , ஒரு பெண் உண்மையினை பேசியதற்கு தனி போலீஸ் படை அமைத்து கைது செய்த இந்த திராவிட மாடலை ஜெயிலுக்கு அனுப்ப நேரம் வந்து விட்டது


அருண், சென்னை
நவ 17, 2024 21:26

சென்னையில் இருக்கும் அனைத்து (அ)நீதிமன்றங்களும் சின்ன அறிவாலயமாக தான் செயல்படுகின்றது... திமுகவில் உள்ள அனைத்து ஹிந்துகளும் சூடு, சொரணை உள்ளவர்கள் அக்கட்சியிலிருந்து வெளிவரவேண்டும்... இந்த அரசு பதவி ஏற்ற நாள்முதல் ஹிந்துக்களுக்கு எதிராகவேதான் செயல்படுகிறது... பள்ளி முதல் பள்ளிவாசல் வரை எல்லாமே ஒருதலை பட்சமாக செயல் படுகிறது... படுமோசம் ஹிந்துக்கள் என்றால் ஏலனம்...


mahalingamssva
நவ 17, 2024 20:42

மனது வலிக்கிறது. இறைவன் காப்பாற்றட்டும். ஓம் நமசிவாய


ஜெய்ஹிந்த்புரம்
நவ 23, 2024 02:42

சீமானுக்கு தான் வலிக்குதுன்னு செய்தி பாத்தேன். ஒனக்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை