உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐதராபாத்தில் நடிகை கஸ்தூரி கைது!

ஐதராபாத்தில் நடிகை கஸ்தூரி கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்தனர்.கடந்த 3ம் தேதி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையிலான, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நடிகை கஸ்துாரி, 50, கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசும்போது, 'தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக' சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. கஸ்தூரி மீது சென்னை எழும்பூர், மதுரை திருநகர் போலீஸ் நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.போலீசார் தேடி வரும் நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில் கஸ்தூரி தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்ய, தனிப்படையினர் தேடி வந்தனர்.இந்த நிலையில், ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்க இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 69 )

வால்டர்
நவ 22, 2024 15:41

தெலுங்கு பேசும் மக்களை கேவலமாக பேசிவிட்டு ஹைதராபாத்தில் கைது. ஹைதராபாத் தெலங்கானாவில் தானே இருக்கிறது.


MADHAVAN
நவ 19, 2024 11:28

வெறும் பைன் மட்டும்தான்


Jose Varghese
நவ 19, 2024 03:05

அப்படியே எச். ராஜா மீது உள்ள வழக்குகளையும் தூசி தட்டவும்


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
நவ 17, 2024 20:29

கஸ்தூரி தலைமறைவு.சுற்றி வளைத்து கஸ்தூரியை பிடித்தனர்.ஏதோ தீவிரவாதியை பிடிப்பது போல் கைது செய்திருக்கின்றனர்.இதைவிட மோசமாகவும் தரந்தாழ்ந்து விமர்சிப்பவர்களையும் இதே போல் கைது செய்திருக்கின்றனரா? ஏன் இந்த பாரபட்சம்.இதை ஏதோ சாகசம் போல் மார்தட்டிக் கொள்வதை பார்த்து நகைப்பு வருகிறது.தமிழக காவல் துறையினர் நேரத்தை விரயம் செய்ததாகவே தோன்றுகிறது.


Ravichandran K
நவ 17, 2024 10:40

நூலிபான் என்று பேசியவரும், பார்ப்பனர்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என்று பேசியவரும் கைது செய்யப் படுவார்கள் என்று நம்பலாம்.


பேசும் தமிழன்
நவ 17, 2024 08:25

வேங்கை வயல் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யப்படவில்லை..... கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளில் சிலரை இன்னும் தேடி வருகின்றனர்.... நாட்டின் பிரதமர் அவர்களை பற்றி தவறாக பேசிய எத்தனையோ குற்றவாளிகள் வெளியே சுற்றி கொண்டு திரிகிறார்கள்.... அவர்களை எல்லாம் பிடிக்க துப்பில்லை.


Dharmavaan
நவ 17, 2024 07:54

எல்லாவற்றுக்கும் காரணம் கேவலமான பாரபட்சமான நீதி ஒன்றே என்று திருந்தும்


Kasimani Baskaran
நவ 17, 2024 07:36

எத்தனை முறை நீதிமன்றத்தில் அவமானப்பட்டாலும் அதை மறைத்து வேறு விதமாக பொய் செய்திகளை போடும் ஊடகங்கள் இருக்கும் வரை திருந்தவேண்டியவர்கள் திருந்த மாட்டார்கள்.


Sriraman Ts
நவ 17, 2024 07:10

மாஜி நடிகை கைது. இவர் சும்மாஇல்லாமல் வேலியில் ஓடும் ஓணானை மடியில் வைத்துக்கொண்டு கொடையறதே என்ற கதை. இப்போது கைது தேவையா


Rajarajan
நவ 17, 2024 07:07

இதில் கொடுமை என்னென்ன, முன்னாள் பிரதமர் பெயர் கொண்ட தி.மு.க. பிரமுகர் ஒருத்தர், ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களை முன்பே முற்றிலும் கொன்று ஒழித்திருக்கவேண்டும்னு, ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசினார். ஆனால், அவரை யாரும் கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.


சமீபத்திய செய்தி