உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் வணிகத்தை எதிர்கொள்ள திணறும் கூட்டுறவு சங்க கடைகள்; மொபைல் ஆப் வந்தும் பயனில்லை

ஆன்லைன் வணிகத்தை எதிர்கொள்ள திணறும் கூட்டுறவு சங்க கடைகள்; மொபைல் ஆப் வந்தும் பயனில்லை

சென்னை : 'ஆன்லைன்' வணிகத்தால், சென்னையில் 2,000க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் மூடப்பட்டதால், தொழிலில் தாக்குப்பிடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கூட்டுறவு சங்கங்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், 300க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகின்றன.

தள்ளுபடி

தனியார் அங்காடிகள், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தள்ளு படி, 'டோர் டெலிவரி' உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகின்றன. தற்போது, ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், 10 நிமிடங்களில் டோர் டெலிவரி, அதிக தள்ளுபடி என, பல சலுகைகளை வழங்குகின்றன. இதனால், மக்களுக்கு வீட்டில் இருந்தபடியே குறைந்த விலைக்கு மளிகை உள்ளிட்டவை கிடைக்கின்றன. எனவே, ஆன்லைன் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல், சென்னையில் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆன்லைன் நிறுவனங்களின் போட்டியை சமாளித்து, தொழிலில் தாக்குப்பிடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கூட்டுறவு சங்கங்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

இது குறித்து, கூட்டுறவு இணை பதிவாளர் ஒருவர் கூறியதாவது:

கூட்டுறவு அங்காடிகளில், வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு மளிகை விற்கப்படுகிறது. கூட்டுறவு தயாரிப்புகளை, மொபைல் போன் செயலி வாயிலாக வாங்கும் வசதி துவக்கப்பட்டது. இருப்பினும், அதிகம் பேர் வாங்குவதில்லை. மொபைல் போன் செயலி, ஆன்லைன் வாயிலாக ஆர்டர் பெற்று, டோர் டெலிவரி செய்யப்பட இருந்தது. இதற்கான பணிகளை செயல்படுத்த, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த சுப்பையன் திட்டமிட்டுஇருந்தார். அவரை, இணை பதிவாளர்கள் எந்நேரத்திலும் தொடர்பு கொண்டு, புதிய திட்டங்கள் குறித்து தெரிவித்து, ஒப்புதல் பெற்றனர்.

நடவடிக்கை

தற்போது, இந்த நிலை இல்லை. இதனால், கூட்டுறவு செயல்பாட்டை மேம்படுத்தும் பணி மட்டுமின்றி, ரேஷன் கடை, கூட்டுறவு வங்கிகளில் ஆய்வுப் பணிகளும் முடங்கியுள்ளன. எனவே, பல்பொருள் அங்காடிகளை நடத்தும் சங்கங்களே, தொழிலில் தாக்குப்பிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு விபரங்களை சேகரித்து, செயல்படுத்த உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mecca Shivan
மார் 22, 2025 11:51

அரசு நிறுவங்களும் சரி அரசு சார்ந்த கைபேசி செயலியாக இருக்கட்டும் ஏன் பல துறைகளின் இணையதளமாக இருக்கட்டும்.. அமைச்சர்கள் முதலமைச்சர் படம் மட்டுமே பிரதானம் என்ற அளவில் இருக்கின்றன ..மக்களுக்கு எளிதாக அணுகும் வகையிலோ அல்லது மக்கள் தேவைகளை முழுமையான அளவிலோ வைக்கப்படவில்லை .. இதற்க்கு இரண்டு காரணம் ஒன்று.. அதிலும் பணம் பார்க்க குறைந்த வசதிகளுடன் தயாரிக்கப்படுவது ஆனால் முழு வசதிகளுக்கும் பணம் செலுத்துவது .. இரண்டாவது எல்லாவற்றையும் ஒன்லைன் என்றாக்கிவிட்டால் மக்களை அலுவலகத்திற்கு வரவைத்து எப்படி பணம் பிடுங்குவது ..


Kasimani Baskaran
மார் 22, 2025 07:03

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி பந்தயத்தில் ஜெயிக்க வாய்ப்பில்லை.


Appa V
மார் 22, 2025 07:01

டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் இடம் பத்தாமல் இருப்பதால் இந்த கடைகளில் சரக்கு விற்பனை செய்து அரசாங்கத்துக்கு வருமானம் பெற உதவலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை