உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காப்புரிமை விவகாரம்; இசையமைப்பாளர் இளையராஜா மனு தள்ளுபடி

காப்புரிமை விவகாரம்; இசையமைப்பாளர் இளையராஜா மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.தங்களுக்கு உரிமை வழங்கப்பட்ட 228 ஆல்பம் பாடல்களை 3ம் நபர்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதாக கூறி, சோனி நிறுவனம், இளையராஜா நிறுவனத்தின் மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இளையராஜாவின் நிறுவனம் அவ்வாறு செய்யாமல் இருக்கும் வகையில் தடை விதிக்கவும், இடைக்கால நிவாரணம் கோரியும் சோனி நிறுவனம் 2022ல் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளத.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cu6jhjbm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சோனி நிறுவனத்தின் வழக்கை சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்ற கோரி, இளையராஜா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 28) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளைய ராஜாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Jay
ஜூலை 28, 2025 18:15

எங்கே நீங்கள் ஒரு பத்து பாடல்களை போட்டு காட்டுங்கள். உங்க டமுக்கு டப்பா எப்படின்னு பாக்கலாம்


Senthoora
ஜூலை 28, 2025 17:35

அவரே அப்போ சொன்னார், தெருப்பாடகனாக நான் சினிமாவுக்கு வந்தேன் என்று, அப்போ யாற்பட்ட்டு பாடினார். அவர்களுக்கு ராயல்ட்டி கொடுப்பாரா? இனி தெரு பாட்டுப்பாடுபவனிடமும், சரிகமவில் பாடும் குழந்தைகளின் பரிசில் ராய்லட்டி கேட்பார்.


BALAMURUGAN JAYARAMAN
ஜூலை 28, 2025 17:03

DMK வை நம்பாதே


Sivagiri
ஜூலை 28, 2025 16:46

1980 வரைதான் இளையராஜா ஒரிஜினல் . . . அதற்கு பிறகு இப்போது வரை , அவரே , அவரது மெட்டுக்களையே திரும்ப திரும்ப . . . திரும்ப திரும்ப . .. திரும்ப திரும்ப . . . ரொம்ப போர் . . . ஒரே டமுக்கு டப்பா டமுக்க டப்பா . . .


venugopal s
ஜூலை 28, 2025 15:01

பாஜகவில் போய் சேர்ந்தால் ஆணவம், திமிர் எல்லாம் தன்னாலே வந்து விடுகிறது!


Keshavan.J
ஜூலை 28, 2025 15:18

நீ சார்த்து இருக்கும் திமுக காரனுங்கள போல முழுசா கொள்ளை அடிக்க இல்லை. புத்தி உனக்கு.


P. SRINIVASAN
ஜூலை 28, 2025 17:46

மிக சையாக சொன்னீர்கள் நண்பா..


V RAMASWAMY
ஜூலை 28, 2025 18:50

ஆணவம் திமிர், கட்சி சார்ந்ததல்ல, அளவில்லா பணம், புகழ் சேர்ந்தபின் வந்தது. கட்சி சாராத இவருக்கு நிகராக ஏன் அதற்கு அதிகமாக கூட இருக்கலாம் ஏ ஆர் ரஹ்மானிடம் உள்ளதா?


A.Gomathinayagam
ஜூலை 28, 2025 14:16

பலரது உழைப்பில் உருவான ஒன்றை சொந்தம் கொண்டாடுவது முறையான ஒன்று அல்ல


Yaro Oruvan
ஜூலை 28, 2025 13:28

இளையராஜா பணத்திற்காக அதை செய்யவில்லை .. எவ்வளவு படங்களுக்கு பணமே வாங்காமல் இசை அமைத்து தந்துள்ளார் தெரியுமா ?? தனது கலையை தனது அனுமதி இல்லாமல் உபயோகிப்பது தவறு என்பதையே உரக்க சொல்கிறார் ..


ramesh
ஜூலை 28, 2025 18:02

படத்தில் இசை அமைக்க தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி விட்டார் . அப்படி என்றால் படம் மற்றும் பாடலின் உரிமை தயாரிப்பாளரை மட்டுமே சேரும் .உதாரணமாக ஒரு டைலர் பணம் வாங்கி கொண்டு நமக்கு சட்டை தைத்து கொடுக்கிறார் . அந்த சட்டைக்கு டைலர் எப்படி உரிமை கொண்டாட முடியும் . அதே போன்றது தான் இதுவும் . அதேபோலத்தான் டைலர் துணி தைக்கும் களையும்


chandran
ஜூலை 28, 2025 19:29

ரமேஷ் அவர்களே, நான் படித்தது, கேட்டது, விசாரித்தது.. சினிமாவை பொறுத்த வரையில் இசை அமைப்பாளர் தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி கொண்டு பாடல், பின்னணி இசை அமைத்தாலும், அவற்றை அந்த படத்தில் மட்டுமே உபயோக படுத்தி கொள்ள தயாரிப்பாளருக்கு உரிமை கொடுக்கிறார், இசை அமைப்பாளர் composer. பாடலின் காப்புரிமை இசை அமைப்பாளரிடமே இருக்கிறது. அவர் யாருக்கு வேண்டுமானாலும் அந்த பாடல்களை உபயோக படுத்தி கொள்ள உரிமை கொடுக்கலாம். இப்படி தான் இந்தியாவில் நிலைமை..


Ramesh Sargam
ஜூலை 28, 2025 13:06

இளையராஜா எவ்வளவு சிறந்த பக்திமான். ஆனால் இன்றும் காப்புரிமை என்று கூறி பணத்துக்காக வழக்கு பதிவு செய்வதெல்லாம் சரியல்ல. இதுநாள் வரையில் சம்பாதித்தது போதாதா? போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து... இளையராஜா இதை கேள்விப்பட்டதில்லையா?


KavikumarRam
ஜூலை 28, 2025 13:48

இளையராஜா அவர்கள் காசுக்காக இதை செய்யவில்லை. அவர் தனது உரிமைக்காக போராடுகிறார். இந்த காப்புரிமை பணம் தன்னுடன் வேலை பார்த்த பார்த்துக்கொண்டு இருக்கும் இசைக்கலைஞர்களுக்கு பிரித்து கொடுப்பதே அவர் நோக்கம். அவர் பலமுறை அதை வெளிப்படுத்தியிருக்கிறார்.


Priyan Vadanad
ஜூலை 28, 2025 14:17

காசேதான் கடவுளடா என்று அல்ல. ஆணவம். ஆணவம் இருக்குமிடம் கடவுள் இல்லை.


Senthoora
ஜூலை 28, 2025 17:38

இளையராஜா தனது இசை கலைஞர்களுக்கு மரியாதையை உங்களுக்கு தெரியல, அவர் செய்த பாவம், மகளோடு போனது, இனியாவது திருந்தனும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை