உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்வப்பெருந்தகை மீதான முறைகேடு புகார்: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

செல்வப்பெருந்தகை மீதான முறைகேடு புகார்: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் உறவினரும் இயக்குநராக உள்ளாரா என்பதை அறிய விரும்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக்கும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி யுடியூபர் சவுக்கு சங்கர் சென்னை ஐகோட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில், 'இந்த திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய பங்கு வகித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரித்து வருகிறது. கடந்த 14 ம் தேதி விசாரித்த போது, இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி சுவாமிநாதன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனிடம் ,' தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் வலியுறுத்தியதாலேயே, தலித் இந்திய தொழில் வர்த்தக சபை (டிஐசிசிஐ) இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது என 2024 டிச.,16ல் முதல்வரின் அறிக்கையை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்.அரசுடன் இணைந்த பிறகு தான், இந்த திட்டத்தை செயல்படுத்த டிஐசிசிஐயின் தலைவர் ரவி குமார் நாரா மற்றும் செல்வப்பெருந்தகையின் உறவினர் வீரமணி ஆகியோர் இணைந்து ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கியதாக மனுதாரர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு உண்மைதானா என அறிய விரும்புகிறோம். இது உண்மையாக இருந்தால், உங்களுக்கு தான் பிரச்னை எனக்கூறினார். மேலும் சென்னை மெட்ரோபொலிட்டன் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரேற்று வாரியம், இது குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 21க்கு ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சாமானியன்
மே 17, 2025 06:07

மனிதன் ஆடி அடங்கிய பின்பு ஜெயிலில் போட்டாலும், போடாட்டாலும் ஒன்னுதான்.


Jagan (Proud Sangi )
மே 16, 2025 20:46

இனி கச்சேரி ஆரம்பம்


Ragupathi
மே 17, 2025 14:32

மறுபடியும் அவர் வீட்லயா ஐயோ.


ஆரூர் ரங்
மே 16, 2025 19:36

சட்டசபையில் மெஜாரிட்டி இருக்குமானால் என்ன தவறிழைத்தாலும் டிஸ்மிஸ் செய்ய முடியாது. பல ஆண்டுகளாக இதுதான் நிதர்சனம்.. இதற்கு மூல காரணம் SR பொம்மை வழக்கில் வழங்கப்பட்ட அநீதி தீர்ப்பு. அதன் விளைவாக மமதா, சோரன் , நிதி போன்ற குடும்ப ஆட்சிகள் உலக மகா ஊழல்களில் தைரியமாக ஈடுபடுகின்றன. நீதித்துறை தான் செய்த தவறை திருத்திக் கொள்ள இது ஒரு சந்தர்பம்.


V Venkatachalam
மே 16, 2025 22:18

ஆரூர் ரங்கண்ணே முதல்ல இந்த பி எஸ் ராமன் தன்னை திருத்தி கொள்ளணும். கோர்ட்டில் கேட்ட கேள்விகளுக்கு உடனே ஒழுங்காக பதில் சொல்ல முடியலையே..


Raja
மே 16, 2025 19:18

சபாஷ் சங்கர் சார்.... உங்களது துணிவையும் நேர்மையையும் பாராட்டுகிறேன்.... உண்மையான பத்திரிக்கையாளர் நீங்கள்தான்....