உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்: எண்ணிக்கையை துவக்குகிறார் நாகேந்திரன்

தி.மு.க., ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்: எண்ணிக்கையை துவக்குகிறார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம்:''தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இன்று முதல் 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட்' ஆகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். 'தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம்' என்ற தலைப்பில், மதுரையில் இருந்து பிரசார பயணத்தைத் துவக்கி இருக்கிறார் நாகேந்திரன். அறிக்கை தயார் முன்னதாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் கைத்தறிநகரில் மக்களை சந்திக்க வந்த நாகேந்திரன் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாங்களும் சுற்றுப்பயணம் துவங்கி, மக்கள் குறைகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்ய உள்ளோம். பணத்தை மட்டுமே குறிக்கோளாக பார்க்கும் தி.மு.க., ஆட்சியை விரைவில் அகற்ற வேண்டும். அதற்கான முகூர்த்த நாள் இன்று குறிக்கப்பட்டு, பிரசாரம் துவக்குகிறோம். தி.மு.க., ஆட்சியில் பெண்கள், சிறுமியர் மீதான பாலியல் குற்றங்கள், லாக் - அப் மரணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் தவிக்கின்றனர். கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அது யாருடைய குற்றம். அரசாங்கத்தின் குற்றம். காவல்துறையின் குற்றம். காவல்துறையை முதல்வர் ஸ்டாலினே கையில் வைத்து இருந்தும், தினமும் படுகொலை, கிட்னி முறைகேடு நடக்கிறது. தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. பிளேடு வைத்து கிழிப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் தலைகுனிவான நிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தி மக்களிடம் பேசக்கூடாது என ஆளுங்கட்சி நினைக்கிறது. எனவே தான் கரூரில் தமிழக வெற்றிக்கழகம் கேட்ட இடத்தை கொடுக்காமல் குறுகலான இடத்தை கொடுத்துள்ளனர். கரூரில் சம்பவம் நடந்தபோது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருகிறார். ரவுடிகள் கையில் பிளேடை வைத்து கிழித்துள்ளனர். மோசமான நிலையில் அச்சம்பவம் நடந்துள்ளது. வி.சி.க., தலைவர் திருமாவளவன் கார், டூ - வீலர் மோதிய விவகாரத்தில் திருமாவளவன் பேசுவது வேடிக்கையாக உள்ளது. டூ-வீலரில் வந்தவர் முறைத்தார், அதனால் அடித்தனர் என்கிறார். இப்படி தான் ஒரு தலைவர் பேசுவதா? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

P.S.KUMARAPPA
அக் 13, 2025 13:06

எடப்பாடி ஐ முன்னிலை படுத்தியதால் குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுத்தாலும் NDA கூட்டணி வெற்றி பெறாது . எடப்பாடி நம்பகத்தன்மை அற்றவர், எதிலும் அறிவார்ந்தவராக இல்லை .வசீகரமற்ற ஒரு தலைவர். தலைமை பண்பு சுத்தமாக இல்லாதவர். மேலும் கீழ்மட்டத்தில் BJP , AIADMK தொண்டர்கள் இடையே ஒரு ஒருங்கிணைப்பு இல்லை. இந்த கூட்டணி உதவாத கூட்டணி. BJP தனியாக நின்று VOTEBANK ஐ கூட்ட தவற விட்டு விட்டது


VENKATASUBRAMANIAN
அக் 13, 2025 08:07

முதலில் இதை விட்டு மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கி கூறுங்கள். திமுக எப்படி ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்பது புரிய வையுங்கள். அதைவிடுத்து சும்மா மற்றவர்களை பற்றி மட்டுமே பேசாதீர்கள்.


Indian
அக் 13, 2025 07:15

மத்திய அரசிடம் பேசி ஏதாவது ஒரு திட்டம் தமிழ் நாட்டிற்கு வாங்கி கொடுத்ததை சொல்ல முடியுமா ???.


pmsamy
அக் 13, 2025 06:37

இது காமெடின்னு சொன்னா பொருத்தமா இருக்கும் அதுக்கு மேல இதுல ஒண்ணுமே இல்ல


Indian
அக் 13, 2025 03:48

2025 ஆம் ஆண்டின் மிக பெரும் நகைசுவை ..


Kasimani Baskaran
அக் 13, 2025 03:40

உழைப்பே போடாமல் ஜெயிக்கவேண்டும் என்று நினைக்கிறது தமிழக பாஜக. குறைந்தபட்சம் நாலு திராவிடப்பொய்களையாவது தோலுரித்துக்காட்ட முயன்றிருக்கலாம்.


Priyan Vadanad
அக் 13, 2025 02:22

நாயனாருக்கு மலையார் கவுண்ட் டவுன் ஏற்கெனவே ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு இருக்கார். அது தெரியாமல் இவர் நாயனம் வாசிக்கிறார்.


Priyan Vadanad
அக் 13, 2025 02:13

பழைய ஆத்திமூக்கனார் புதிய முகமூடியில் உட்கார்ந்து நம்பர்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.