உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடியின் பேச்சு வீடியோ: போலீசிடம் கேட்கிறது கோர்ட்

பொன்முடியின் பேச்சு வீடியோ: போலீசிடம் கேட்கிறது கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். பலரும் கண்டனம் தெரிவித்தனர்.பொன்முடியின் பேச்சு, வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருவதாக கூறி, தாமாக முன்வந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி, முகாந்திரம் இல்லை என, காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டது,'' என கூறி, அது தொடர்பான விபரங்களை தாக்கல் செய்தார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'புகார்களில் முகாந்திரம் இல்லை என்று, எந்த அடிப்படையில் காவல் துறை முடிவுக்கு வந்தது' என, கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''கடந்த 1972ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துகளையே, முன்னாள் அமைச்சரும் குறிப்பிட்டு பேசினார். அது, அவரின் கருத்துகள் அல்ல. அதுதொடர்பான வீடியோவை முழுமையாக பார்த்தால், அந்த விபரங்கள் தெரியவரும்,'' என்றார்.இதையடுத்து நீதிபதி, 'பொன்முடியின் முழு பேச்சு குறித்த வீடியோவையும், கடந்த 1972ம் ஆண்டு, அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சுகளின் விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்' என, காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 23, 2025 10:48

கணம் கோர்ட்டார் பொன்முடியிடமே கேட்டு இருக்கலாமே


sankaranarayanan
ஆக 23, 2025 10:10

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை முழுவது உயர்நிதி மன்றம் நன்றாக கேட்டபின் அவர்களே ஆச்சர்யத்தில் அமர்வார்கள் ஒரு பழைய மந்திரி பேசும் பேச்சு இவைகள் என்று கொந்தளிப்பார்கள் தண்டனை இன்னம் சிறப்பாக வேறுமாதிரியாக இருக்கும்


suresh Sridharan
ஆக 23, 2025 09:37

ஐயா அது தங்கள் முன்னாள் இருக்கும் கம்ப்யூட்டரில் வெறும் வாயால் சொன்னாலே காக்கி இடம் கேட்க வேண்டுமா


Chandru
ஆக 23, 2025 09:35

Supreme court will impose of fine if Rs. 10 lakhs on Madras High court for this appropriate action .


Rameshmoorthy
ஆக 23, 2025 09:03

Mr Ponmudi is a political diease and need to be eradicated


Barakat Ali
ஆக 23, 2025 08:21

பெரிய சார்க்கு கீழே செயல்படும் காவல்துறை கொடுக்குமா ????


ஆரூர் ரங்
ஆக 23, 2025 08:00

வான்கோழி கதையை பொது வெளியில் கூட்டம் போட்டு விவரித்து கட்டுமரத்தின் புகழைப் பரப்ப விடுவார்களா?.


நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2025 07:42

வெட்டி ஒட்டி செய்வதற்கு எவ்ளோ பெரு இருக்காங்க , அன்று கைது செய்தபோது எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது , 2 மணிநேரத்தில் ஐயோ கொல்றாங்களே என்று ஒட்டிக்கிச்சு இப்போ ?


Naga Subramanian
ஆக 23, 2025 07:31

ஆபாசத்தை எப்பொழுது பேசினாலும் குற்றம்தான். எந்த மதத்தையும் இழிவாகப் பேசக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் போகிறது இந்த மாதிரியான அரசியல் வியாதிகளுக்கு. ஏன், இதே ஆபாசப் பேச்சை மற்ற மதங்களின் மீது காட்ட முடிவதில்லை? மைனாரிட்டி வாக்குகளை பெறுவதற்கான போக்கே இது. ஆகையால், இந்த மாதிரியான ஆபாச பேச்சாளர் யாராகினும், உச்ச பட்ச தண்டனையாக, ஆயுள் தண்டனை கொடுத்து உள்ளே தள்ள வேண்டும். மேலும், அவர்கள் பெற்ற அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். மொத்தத்தில், சிட்டிசன் என்ற படத்தில் வருவதை போன்ற தீர்ப்பு கொடுத்தால், நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு மரியாதை பெருகும் என்பது உண்மை. நடக்குமா?


Modisha
ஆக 23, 2025 05:01

முன்பு எப்போதோ யாரோ அசிங்கமா, ஆபாசமா பேசி இருந்தால் அதை மேற்கோள் காட்டி நாங்களும் அதே போல் ஆபாசமாக பேசலாமா . இந்த ஆளுக்கு என்ன சட்ட அறிவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை