உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் விரிசல்: அதிகாரிகள் ஆய்வு

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் விரிசல்: அதிகாரிகள் ஆய்வு

திருச்சி: கடந்த 2007ம் ஆண்டு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அரியமங்கலம், திருவெறும்பூர் பகுதிகளில் உள்ள ரயில்வே மேம்பாலங்கள், துவாக்குடி என்.ஐ.டி., மேம்பாலம் ஆகியன புதிதாக அமைக்கப்பட்டன. தற்போது, பெய்து வரும் கனமழை காரணமாக, அரியமங்கலம் மேம்பாலத்தில், திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி செல்லும் மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது.இது பற்றி தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டனர்.'தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட போது, அமைக்கப்பட்ட பாலங்கள் கான்கிரீட் சிலாப்புகளை அடுக்கியது போல இருக்கும். கட்டுமானத்தின் வடிவமைப்பில், இடைவெளி காணப்படுவதை விரிசல் என்கின்றனர்; பாலம் பாதுகாப்பாக உள்ளது. இருப்பினும், பொறியாளர்களை வைத்து, இரண்டு நாட்களுக்கு பாலத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
டிச 14, 2024 09:16

ஒன்றும் பெரிதாக்க இல்லையப்பா நாங்கள் உடனே இன்ஜினியர்களை அங்கே அனுப்பி அந்த இடத்தில் மண்ணைக்கொட்டி சரி சமம் செய்துவிடுவோம் எல்லாமே சரியாகிவிடும் இதுதான் நாங்கள் செய்யும் முதலுதவி. பிறகு கோடைகாலம் வந்துவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை