மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
3 hour(s) ago
சென்னை : புதிய தொழிற்கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.பட்ஜெட் அறிவிப்பு:மோட்டார் வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் தயாரித்தல், உயிரி தொழில்நுட்பம், மருந்துகள் தயாரிப்பு போன்ற துறைகளுக்கு தனித்தனியே துறை சார்ந்த தொழிற்கொள்கை வகுக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு, முக்கிய துறைகளில் உள்ள குறைகளை கண்டறிந்து, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, '2025 தொலைநோக்கு திட்டம்' தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய நில எடுப்புக் கொள்கை: கட்டாய நில எடுப்புச் சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதால், நிலங்களை ஒருங்கிணைத்து, அதன் பயனை அனைவரும் பகிர்வது போன்ற புதுமையான வழிமுறைகளை உள்ளடக்கி, புதிய நில எடுப்பு கொள்கை உருவாக்கப்படும். போதிய அளவு நில வங்கியை உருவாக்கி, தொழிற்பூங்காக்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென் மாவட்டங்களில் தொழில் துவங்க வசதியாக, மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையை, தற்சார்புடைய தொழில் வளர்ச்சி பெருவழி பாதையாக மாற்றப்படும். உற்பத்தி வர்த்தக முதலீட்டு பகுதி, விவசாய வர்த்தக முதலீட்டு பகுதி, அறிவுசார் மையம், சிறப்புச் சுற்றுலா முதலீட்டு மண்டலம் ஆகியவை அமைப்பதற்கு, இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago
3 hour(s) ago