உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

* ஐ.பி.எல்., சூதாட்டம்: இருவர் கைதுயாத்கிர், ஷஹாபூரை;d சேர்ந்தவர்கள் ஹரிபிரசாத், 25 புந்தலிகா,28. இவர்கள் ஒரு செயலியை பயன்படுத்தி ஐ.பி.எல்., போட்டிகளின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, ஷஹாபூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இருவரையும் சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6.99 லட்சம் ரொக்கம், மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.* மகளை பலாத்காரம் செய்த தந்தைகதக், முல்குண்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 55. இவர் தன் 16 வயது மகளை பல முறை பலாத்காரம் செய்துள்ளார். மற்றவர்களிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். தன் வீட்டாரிடம் சிறுமி கூறினார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், அவர் கருவுற்றிருப்பது தெரிந்தது. முல்குண்டு போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரமேஷ் கைது செய்யப்பட்டார். தற்போது, நீதிமன்ற காவலில் உள்ளார்.* மாஜி எம்.எல்.ஏ.,வின் உறவினர் தற்கொலைமுன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.பச்சேகவுடாவின் உறவினர் ஹேமந்த், 18. இவர் முத்தேனஹள்ளயில் உள்ள மருத்துவ கல்லுாரியில் மருத்துவம் படித்து வந்தார். நேற்று சிக்கப்பலாபூர் தாலுகாவில் உள்ள பண்ணை வீட்டுக்கு, தன் தாயுடன் வந்திருந்தார். அப்போது, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.* கல்லுாரி மாணவர் தற்கொலைபெலகாவி, சிக்கோடி தாலுகாவை சேர்ந்தவர் சாகர் துக்காராம் குராடே, 19. இவர் தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., படித்து வந்தார். இவருக்கு, கல்லூரிக்கு விடுப்பு எடுக்காமல் செல்லுமாறு வீட்டில் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனால், ஆத்திரமடைந்தவர், நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.* மூவர் கைதுபெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூரை சேர்ந்தவர்கள் உதய் குமார், ஸ்ரீனிவாஸ், நவீன், 26. கவுரிபிதனுாரை சேர்ந்த அருண்குமார், 34. இவர்கள் கடந்த 2ம் தேதி, பயங்கர ஆயுதங்களுடன் பொது மக்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு இருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை பிடிக்க முயற்சித்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இவர்களை கவுரிபிதனுார் கிராம போலீசார் தேடி வந்தனர். நேற்று உதய் குமார், ஸ்ரீனிவாஸ், 14 வயது சிறுவன் ஆகிய மூவரை கைது செய்தனர்.* இரு திருடர்கள் கைதுபெங்களூரு, கமலாநகரை சேர்ந்த உல்லாஸ், 24, யஷ்வந்த்பூரை சேர்ந்த கிரண், 46. இவர்கள் கடந்த மார்ச் 20, பெங்களூரு ரூரலில் உள்ள கவுரிபிதனூர் பகுதியில் உள்ள மருந்துக்கடையில் திருடிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கவுரிபிதனுார் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து, இவர்களை தேடி வந்தனர். நேற்று உல்லாஸ், கிரண் ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கணேஷ், 23, என்பவரை தேடி வருகின்றனர்.* கணவருக்கு ஆயுள் தண்டனைதுமகூரு, கோரடகெரே தாலுகா, தராதி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ், 49. இவரது மனைவி யசோதா, 41. கடந்த 2021, மார்ச்சில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், தன் மனைவியை தேவராஜ் கத்தியால் வெட்டிக் கொலை செய்தார். இது குறித்து வழக்கு நேற்று மதுகிரி 4வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தேவராஜுக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை