உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.470 கோடி நிலுவை

பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.470 கோடி நிலுவை

சென்னை:கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன. உரிய காலத்திற்குள் கடனை அடைத்து விட்டால், வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. கடந்த, 2021 ஜன., நிலவரப்படி, 16.43 லட்சம் விவசாயிகள் பெற்றிருந்த, 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து, அந்தாண்டில் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிதியை ஆண்டுதோறும் ஒவ்வொரு பகுதியாக, கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு, அரசு வழங்கி வந்தது. பயிர்க்கடன் தள்ளுபடி தொகையில் இன்னும், 470 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிதியை விரைந்து விடுவிக்குமாறு, அரசுக்கு சங்க பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !