உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; மழையில் தப்பியது சென்னை!

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; மழையில் தப்பியது சென்னை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. சென்னைக்கு வடக்கே அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=quw1fd8n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழகம் ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு வடக்கே இன்று(அக்.,17) காலை 4.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகத்தின் பகுதியில் மேல், தற்போது நிலவி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மதியத்துக்கு மேல் மழை முற்றிலும் நின்று விட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
அக் 17, 2024 16:48

எதிர்க்கட்சிகளுக்கு வடை போச்சே...


வைகுண்டேஸ்வரன்
அக் 17, 2024 12:26

சுந்தரம் விசு மற்றும் அப்போஸ்தலன் - இருவருக்கும் நன்றி. முதல் முறை ஒரு பாசிட்டிவ் எண்ணம் கொண்ட கருந்துகள் படித்தேன். ஐயோ.. அது வஞ்சப் புகழ்ச்சி என்று சொல்லப்போறாங்க, அதனால என்ன.. நிஜம் நிஜம் தானே..இல்லை என்று ஆகிவிடாதல்லவா. We should encourage positive writings.


Barakat Ali
அக் 17, 2024 14:08

சமீபத்தில் வெளியான உங்களது இருபது சொந்தக் கருத்துக்களை சாம்பிளாக எடுத்துப்பாருங்கள் ..... அவற்றில் எத்தனை நேர்மறை சிந்தனை கொண்டவையாக இருந்தன ????


Nallavan
அக் 17, 2024 10:50

சென்னை மழை நீர் வடிதலுக்கு துரிதமாக வேலைகளை கண்டு அனைத்து தரப்பிலும் பாராட்டு


RAMAKRISHNAN NATESAN
அக் 17, 2024 10:21

தமிழகத்துக்கு வடகிழக்கே உள்ள மாநிலங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும்... ஒடிஸ்ஸா, ஓரளவு மேற்குவங்கம் வரை மேகமூட்டம் காணப்படுகிறது ........


veeramani
அக் 17, 2024 09:31

இந்திய அரசின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிவர் கருத்து. திரு பாலச்சந்திரன் .. வானிலை நிபுணர் ..கடந்த வாரத்தில் வங்காள விரிகுடாவில் நிலைபெற்றுஇருந்த காற்று அழுத்த மண்டலம் பற்றி ஆய்வு எய்து சென்னை செங்கல்பட்டு திருவள்ளுர் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அதீத காண மழை பெய்யலாம் என கணித்திருந்தார் . இவரின் கணிப்பு சரி. ஆனால் புதன் அன்று மழை போலுவு இல்லை என ஒரு சில அறிவிலி பேசுகிறார்கள். குற்றம் சுமத்துகிறார்கள் அவர்களுக்கு சொல்லிக்கொள்வது. ஒரு விஞ்ஞானி கணிக்கத்தான் இயலும். இவர் வானத்தில் பறந்து மேகம் கூட்டங்களை அளவெடுக்கவில்லை. தண்ணீர் இருப்பு கண்டிக்கவில்லை. காற்றின் வேகம் எவராலும் கணிக்க இயலாது. அதுதான் இயர்கை . அதை விட்டுவிட்டு கணிப்பு சரியில்லை, கம்ப்யூட்டர் சரியில்லை. மய்ய அரசாங்கம் சரியில்லை என கூவுவது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னையில் உள்ள மொபில் டௌவ ர்கள் தான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம். அவை பரப்பும் மின்காந்த வீசை மெகா கூட்டங்களை அதீத அளவிற்கு பாதிக்கிறது. வரும் களங்களில் மொபைல் டௌர்கள் பரப்பும் மின்காந்தவிசை இயற்கை கொடைத்தரும் மழை யை பாதிக்கலாம்


நிக்கோல்தாம்சன்
அக் 17, 2024 08:11

அதிகாலையா இல்லை இரவு 11:30?


Duruvesan
அக் 17, 2024 08:11

புயலுக்கே விடியல் தந்த மாவீரன் விடியல் வாழ்க


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 17, 2024 09:45

வெகு விரைவில் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடைபெறும். மழையை விரட்டி சென்னையைக் காத்த ஓங்கோல் செங்கல் உதயண்ண காரு ஸ்வாமிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் மாபெரும் பாராட்டு விழா கவிஞர் வைரமுத்து கவிதையுடன் தொடங்கி நடை பெரும். இண்டி தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள். அது தொடர்பாக கார் ஓட்டப்பந்தயமும் ரேஸ் உண்டு


Apposthalan samlin
அக் 17, 2024 11:03

2026 லையும் இதே விடியல் தான்


சமீபத்திய செய்தி