UPDATED : ஜூன் 21, 2025 01:39 PM | ADDED : ஜூன் 21, 2025 01:33 PM
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள் புரத்தில் குடும்ப பிரச்னையில் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, சுந்தரவேலு என்பவர் போலீசில் சரண் அடைந்தார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள் புரத்தில் இன்று (ஜூன் 21) குடும்ப பிரச்னை காரணமாக விவசாயி சுந்தரவேலு மனைவி பூங்கொடி, மகள்கள் ஜெயதுர்கா ஜெயலட்சுமி ஆகியோரை அருவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர், அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்ப பிரச்னையில் மனைவி, மகள்களை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.