உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணிற்கு 20 ஆண்டு சிறை: கடலுார் போக்சோ கோர்ட் தீர்ப்பு

பெண்ணிற்கு 20 ஆண்டு சிறை: கடலுார் போக்சோ கோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலுார்: பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பளித்தது. கடலுார் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்த 14 மற்றும் 13 வயதுடைய பள்ளி மாணவிகள் 2014ம் ஆண்டு மாயமாகினர். இதுகுறித்து ஒரு சிறுமியின் தந்தை திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமிகளை கண்டுபிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில், விபசார கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது. இது தொடர்பாக 22 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து இவ்வழக்கு, 2016ம் ஆண்டு கடலுார் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. கடலுார் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2 பேர் இறந்தனர்.வழக்கில் அரியலுார் மாவட்டம், இடையக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி, விருத்தாசலம் ஜெபினா,40; ஆகியோர் தலைமறைவாகினர். 2019ம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் கடலுார் மகிளா கோர்ட், 17 பேரில் 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து, ஒருவரை மட்டும் விடுவித்து தீர்ப்பு கூறியது. ஜெபினாவை 2024ம் ஆண்டிலும், சதீஷ்குமார், தமிழரசியை 2025ம் ஆண்டிலும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர். ஜெபினா மீதான விசாரணை கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லட்சுமி ரமேஷ் நேற்று, ஜெபினாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பு கூறினார். ஜெபினா கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற இருவர் மீதான விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

selva
மே 03, 2025 08:21

அதுக்கு முன்னால இந்த கவர்னர் ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்ற ராஜசபா ஒழிப்போம் ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத மந்திரிகளும் இருக்கக்கூடாது


Raghavan
ஏப் 30, 2025 12:29

இவர்கள் வழக்கை 15 வருடங்கள் இழுத்தடிப்பார்களாம் ஆனால் கவர்னரும் ஜனாதிபதியும் 3 மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்கணுமாம். ஜனாதிபதிக்கு உத்திரவிட நீதி மன்றங்களுக்கு அதிகாரம் உண்டா? இந்த லக்ஷணத்தில் இவர்கள் சி பி ஐ க்கு அறிவுரை கூறுகிறார்களாம். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன். முதலில் கொலிஜியத்தை ஒழிக்கவேண்டும் . நீட் போல தேர்வு நடத்தி நீதிபதிகளை தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்கள் ஒழுங்காக செயல்படும் .


Sivaprakasam Chinnayan
மே 01, 2025 07:03

Thambi . So you know last year NEET Exam?. Hi Hi Question paper out in Social media?. Very GOOD


sasidharan
ஏப் 30, 2025 12:28

ஏன் இந்த தாமதம் , இந்த மாதிரி வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் , அப்போதுதான் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.


Nellai tamilan
ஏப் 30, 2025 11:35

ஒரு சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்க மூன்று மாதங்கள் காலக்கெடுவை ஜனாதிபதிக்கு விதிக்கும் நீதிமன்றங்கள் எல்லா சாட்சிகளுடன் இருக்கும் ஒரு சாதாரண வழக்கில் தீர்ப்பு சொல்ல 11 வருடங்கள் ஆகிறது. முதலில் நீதிமன்றங்களின் விசாரணை மற்றும் தீர்ப்புக்கு காலக்கெடுவை நிர்ணயம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். வாதியும் பிரதிவாதியும் இறந்த பிறகு நீங்கள் தீர்ப்பு சொல்லி என்ன பயன்.


VENKATASUBRAMANIAN
ஏப் 30, 2025 08:22

இதை சொல்ல நீதிமன்றங்கள் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இதுதான் இன்றைய நிலை. எப்படி மக்களுக்கு பயம் வரும்.


Barakat Ali
ஏப் 30, 2025 11:18

நீதித்துறையும் தேசவிரோத மற்றும் ஆட்சியாளர்களின் நியாயமான நடவடிக்கைகளுக்குக்கூட எதிரானது என்று நிரூபிக்கப்பட்டுக் கொண்டுள்ளது ....


சிந்தனை
ஏப் 30, 2025 06:55

வெறும் பதினோரு வருடத்திற்குள் நீதிபதிகள் தீர்ப்பளித்தது தான் வருத்தமாக இருக்கிறது இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் தாமதிக்கலாம் சீக்கிரம் தீர்ப்புகளை அளித்தால் கோர்ட்டில் வழக்குகள் இல்லாமல் போய்விடும் நீதிபதிகளுக்கு வேலை இழப்பு ஏற்படும் சாப்பிடுவதற்கு சம்பளம் கிடைக்காமல் போய்விடும்


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 30, 2025 07:36

2011 முதல் 2021 வரை புத்தான்டுகள் அம்மா OPS, EPS ஆட்சி. இந்த ஆட்சி வந்த பிறகே விசாரணை சூடு பிடித்துள்ளது. தலைமறைவானவரை கொண்டுவந்து தண்டனை விதித்துள்ளனர்.


Barakat Ali
ஏப் 30, 2025 08:15

வழக்கு இழுத்துக்கொண்டு போவதற்கு அரசு காரணம் என்றால் உங்கள் துக்ளக்காரின் ராஜாங்கம் பல விதங்களில் சங்கடப்பட வேண்டிவரும் ...


சிந்தனை
ஏப் 30, 2025 06:53

இவர்களின் மதம் என்ன அரசியல் கட்சி என்ன என்பதையும் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் செய்தி பயனுள்ளது...


அப்பாவி
ஏப் 30, 2025 06:43

கவலை வாணாம் தாயி.


வாய்மையே வெல்லும்
ஏப் 30, 2025 22:08

திருடனுக்கு பரிஞ்சு பேசுற ஆளு திராவிடிய கைத்தடி திருட்டு மூர்க்கன்ஸ் திருந்தாத ஜென்மங்கள்


Svs Yaadum oore
ஏப் 30, 2025 06:32

2019ம் ஆண்டு, கடலுார் மகிளா கோர்ட், 17 பேரில் 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து, ஒருவரை மட்டும் விடுவித்து தீர்ப்பு கூறியதாம் ....ஜெபினாவை 2024ம் ஆண்டிலும், சதீஷ்குமார், தமிழரசியை 2025ம் ஆண்டிலும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனராம் ......தீர்ப்பு கொடுத்து 6 வருஷம் கழித்து குற்றவாளியை தேடி கண்டுபிடிக்கனுமாம் .....இதுபோன்ற சட்டம் உள்ளவரை இந்த நாடு உருப்பட வழியில்லை ....


Iyer
ஏப் 30, 2025 05:56

11 வருடங்களா ? இவ்வளவு கொடூர கொடூர குற்றம் செய்தவர்களுக்கு ஏன் இவ்வளவு தாமதமாக தண்டனை ?


சமீபத்திய செய்தி