உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைபர் குற்றவாளிகளின் புது பிசினஸ் ஆன்லைனில் பட்டாசு விற்பதாக மோசடி

சைபர் குற்றவாளிகளின் புது பிசினஸ் ஆன்லைனில் பட்டாசு விற்பதாக மோசடி

சென்னை:தீபாவளி பண்டிகையை யொட்டி, 'சைபர்' குற்றவாளிகள், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யு டியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், 'ஆன்லைன்' வாயிலாக தள்ளுபடி விலையில் பட்டாசு விற்கப்படுவதாக விளம்பரம் செய்து, லட்சக்கணக்கில் மோசடி செய்துஉள்ளனர். தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்தில், 17 பேர் மோசடியில் ஈடுபட்டது குறித்து, தேசிய சைபர் குற்றப்பிரிவு ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் புகார் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக, சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைபர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கூடுதல் தள்ளுபடி

இதுகுறித்து மாநில 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மீட்டல் கூறியதாவது:மோசடி கும்பல் பண்டிகை கால ஷாப்பிங்கை குறிவைத்து, தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாக, லாபகரமாக தோன்றும் விளம்பரங்களை வடிவமைத்து, மொபைல் போன் எண்களுடன் சமூக வலைதளம் வாயிலாக விளம்பரம் செய்கின்றனர்.அவர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது, govwww.kannancrackers.in மற்றும் www.sunrisecrakers.comஎன்ற போலி இணையதளங்கள் வாயிலாக, 'ஆர்டர்' கொடுத்து வாங்குமாறு வலியுறுத்துகின்றனர். இந்த இணையதளத்தை திறக்கும்போது, அசல் பட்டாசுகள் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனம், விலைப்பட்டியல் என, அத்தனை விபரங்களும் இருக்கும். பணம் செலுத்தும் முறைகள் குறித்தும் இருக்கும்.பணம் செலுத்தும்போது, விலையில் கூடுதல் தள்ளுபடி அளித்து காட்டப்படும். பணம் அனுப்பியவுடன், தலைமறைவாகி விடுகின்றனர். அவர்கள் பற்றிய தகவல்களையும் நீக்கி விடுகின்றனர். அவர்களிடம், பொதுமக்கள் தங்கள் நிதி தொடர்பான தகவல்களை பகிர்வதன் வாயிலாக, அவர்களின் சுய விபரங்களை மோசடி நபர்கள் தவறாக பயன்படுத்த வழி வகுக்கிறது.

விசாரிக்க வேண்டும்

இதனால், பணம் செலுத்தும் முன், ஆன்லைன் விற்பனையாளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் மீது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாக தள்ளுபடிகளை அள்ளி வீசினால், அதுபற்றி தீர விசாரிக்க வேண்டும். பாதுகாப்பற்ற தளங்கள் மற்றும், 'வாட்ஸாப்' வழியாக, தனிப்பட்ட அல்லது நிதி விபரங்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.இதுபோன்ற மோச டிக்கு ஆளானால், 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை