உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ.2,000 கோடி நிவாரணத் தொகையை விடுவிக்க கனிமொழி வலியுறுத்தல்

பெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ.2,000 கோடி நிவாரணத் தொகையை விடுவிக்க கனிமொழி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில், ரூ.2,000 கோடி நிவாரணத் தொகையை இந்த முறையாவது உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், பார்லி., குழுத் தலைவருமான கனிமொழி, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று (டிச.,03) 'நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும். இந்த நிவாரண நிதியை உடனடியாக வழங்குவது குறித்து லோக்சபாவில் விவாதிக்க வேண்டும். பெஞ்சல் புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி திமுக எம்.பி., கனிமொழி ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தமிழக எம்.பி.,க்கள் வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி, பெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களைக் கருத்தில்கொண்டு, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தற்காலிகமாகச் சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண நிதியினை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M Ramachandran
டிச 03, 2024 20:25

காணாம போன இந்த அம்மா எப்போ திரும்பி வந்தது. ஓஹோ முதல்வரிடம் ஸ்கோர் செய்யும் முயற்சியா?


Ramesh Sargam
டிச 03, 2024 20:25

அக்காவுக்கு, 2G ஊழல், மற்றும் பல ஊழல்களில் சுருட்டியது பத்தவில்லையா? இல்லை அவை எல்லாம் ஸ்வாகாவா...??


RAVINDRAN.G
டிச 03, 2024 19:24

பணம் இருந்தால் கொடுக்க மாட்டார்களா ? அடுத்த தேர்தலுக்கு தான் பணம் கொடுப்போம் .மக்கள் அதுவரை பொறுமையா இருக்கவும். பொழுது போகணும்னா ஒன்றிய அரசை குறை சொல்வோம் . இருக்கவே இருக்கு டைம் பாஸுக்கு காண்டீன் .


N DHANDAPANI
டிச 04, 2024 09:22

ஏதோ நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று கேட்பதில் தவறில்லை. ஆனால் மாநிலத்தில் அதிகாரிகளும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் நீர் மேலாண்மைக்கு எந்த உதவியும் செய்வதில்லை .....பஞ்சாயத்துக்கள் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்புகளுக்கு எந்த ஆலோசனைகளோ அல்லது அனுமதிகளோ பெற்றுத் தருவதும் இல்லை. இந்த துறையில் அதிக அனுபவரீதியான நிபுணத்துவம் பெற்ற விவசாய சங்கங்கள் சொல்வதை செவிமடுத்தும் கேட்பதில்லை ...நிறுவனங்கள் வந்து தானே உதவி மாநிலத்தில் உள்ள அனைத்து குட்டைகளிலும் குளங்களிலும் நீர் சேர்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் வெள்ள நிவாரணம் குறைவாக இருந்தாலே போதும்..


N DHANDAPANI
டிச 04, 2024 09:23

மாநில அரசு அதிகாரிகள் தங்களுக்கு கிடைக்கும் மனுக்களில் நீர் வழிப்பாதை நீர் தேக்கங்கள் பற்றிய பிரச்சினைகளை தீர்த்து வைத்தாலே தமிழகத்தில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு நிவாரணம் தர வேண்டிய தேவை வராது என்பது எங்களுடைய உறுதியான எண்ணப்பாடு தமிழக விவசாயிகள் சங்கம்


Barakat Ali
டிச 03, 2024 19:24

மக்களிடம் பாவப்பட், டூ ஜி யில் சுருட்டியதில் ஒரு பங்கு கொடுக்கலாமா ????


Barakat Ali
டிச 03, 2024 19:22

அமித் சேட்டிடம் கேட்கலாம் ....


VENKATASUBRAMANIAN
டிச 03, 2024 19:01

ஏன் உங்கள் குடும்பத்தில் உள்ள பணத்தை செலவு செய்ய வேண்டியதுதானே. அரசு சம்பளம் மட்டும் வாங்க தெரியுதா. திமுக அரசு 4000 கோடிக்கு இன்னும் கணக்கு சொல்லவில்லை. கணக்கு கேட்ட எம்ஜிஆர் அவர்களை கட்சியை விட்டு நீக்கிய குடும்பம் தானே. இதுதான் திராவிட மாடல்.


Mithun
டிச 03, 2024 18:43

உடனே தட்ட தூக்கிட்டு கிளம்பிடுறது.


விஜய்
டிச 03, 2024 18:25

செலவுக்கு பணம் வேணும்


joe
டிச 03, 2024 17:30

மக்கள் பணத்தை தின்னும் நீங்கள் நிவாரணத்தொகையை பேசும் யோக்கியதை இல்லை .


joe
டிச 03, 2024 17:25

2G ஊழல் பணம் என்னாச்சு ? அதை வைத்து நிவாரணத் தொகையை நீங்கள் கொடுக்கலாமே .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை