உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிதக்கும் வட மாவட்டங்கள், வெள்ளக்காடாக மாறியது

மிதக்கும் வட மாவட்டங்கள், வெள்ளக்காடாக மாறியது

-- நமது நிருபர் குழு - 'பெஞ்சல்' புயல் காரணமாக கொட்டித் தீர்த்த பெருமழையால், கடலுார் முதல் கிருஷ்ணகிரி வரையான வடமாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையை உடைத்துக் கொண்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. நுாற்றுக்கணக்கான கிராமங்களும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் தத்தளிக்கின்றன. சாலைகளும் பாலங்களும் துண்டிக்கப்பட்டதால், ரயில், பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.

https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zckpj7j1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழுப்புரம் மாவட்டம் மயிலம்; கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், ஒரே நாளில், 50 செ.மீ.,க்கு மேல் மழை பெய்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோர பகுதிகளில் கவனம் செலுத்திய அரசு, உள்மாவட்டங்களை பெரிதாக கணக்கில் கொள்ளவில்லை. யாரும் எதிர்பாராத வகையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் கரைகளை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்ததால், இதுவரை இல்லாத அளவுக்கு வடமாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை - திருச்சி சாலை

சாத்தனுார் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், திருக்கோவிலுார் அணைக்கட்டு வந்தடைந்தது. அதை தொடர்ந்து, மலட்டாற்றில் திடீரென வினாடிக்கு 10,000 கன அடிக்கு மேல் நீர் வரத்து அதிகரித்தது. திருவெண்ணெய்நல்லுார், டி.எடையார், தொட்டிக்குடிசை, கண்ணாரம்பட்டு, தென்மங்கலம், அரசூர், பாரதிநகர், இருவேல்பட்டு பகுதிகளில் ஆற்றோர குடியிருப்புகள், விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.அரசூர் கூட்ரோடு, திருவெண்ணெய்நல்லுார் சாலை, மலட்டாற்றின் குறுக்கே உள்ள, சென்னை - திருச்சி நெடுஞ்சாலை ஆகியவற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது; போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்களை வி.ஆர்.எஸ்., கல்லுாரி எதிரே திருப்பி, சென்னை - திருச்சி சாலையை ஒருவழி சாலையாக மாற்றி அனுப்பினர். நெரிசல் ஏற்பட்டு, 2 கி.மீ., துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் மடப்பட்டில் இருந்து பண்ருட்டி, திருக்கோவிலுார் வழியாக சென்னைக்கு அனுப்பப்பட்டன.

கடலுார் - புதுச்சேரி சாலை

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால், கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு உட்பட, 25 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. கடலுார் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர்.

20 கிராமங்கள்

தென்பெண்ணை கரையோரம் உள்ள புதுச்சேரி பகுதிகளான இருளஞ்சந்தை, குருவிநத்தம், பாகூர், கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம் கிராமங்களில், வெள்ள நீர் புகுந்தது. அங்கு, 5,000த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பாகூர் பகுதியில், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் சாலை துண்டிக்கப்பட்டு, தீவுகளாக மாறின.

* 20 அடி பாலம் 'அம்போ'

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நான்கு நாட்களாக மழை பெய்கிறது. புத்துாரில் இருந்து, புளியங்கடை செல்லும் வழியில் இருந்த, 20 அடி பாலம், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், அரண்மனை காடு, புளியன்கடை, பாறைகடை சாலைகள் துண்டிக்கப்பட்டன. அந்த மக்கள் எங்கும் செல்ல முடியாமல் முடங்கினர். ஏற்காடு மலைப்பாதையில் உள்ள, 40 அடி பாலம் அருகில் நிலச்சரிவு ஏற்பட்டது. பெரிய பாறை உருண்டு சாலையில் விழுந்தது. மரங்களும் முறிந்து விழுந்தன. மேலும், 20 இடங்களில், சிறு கற்கள், பாறைகள், மண் சாலையில் விழுந்ததால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

* தர்மபுரி மாவட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில் உள்ள அணையிலிருந்து திறந்து விட்ட, 3,750 கன அடி நீரால், அரூர் வாணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கரையோர குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஐம்பது குடும்பத்தினர், திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். வத்தல் மலையில் காட்டாற்று வெள்ளம் உருவாகி, நீரோடைகள் வழியே மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணைகளில் சீறி பாய்ந்தது. மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சாலை துண்டிப்பால், 10 கிராம மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

* கள்ளக்குறிச்சி மாவட்டம்

சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பெண்ணையாற்றில் நீர் திறந்து விடப்பட்டது. அதனால், கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் வீடுகளை நீர் சூழ்ந்தது. அதில், 30 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் தண்ணீர் திறந்து விட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

* ஊத்தங்கரையில் அதிகபட்சம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நவம்பர், 30 மதியம் முதல் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மழை அதிகரித்து, தமிழகத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில், 50.3 செ.மீ., அளவில் மழை பதிவானது. அருகே உள்ள பாம்பாறு அணை, 595 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த அணைக்கு திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாது மலையிலிருந்து வரும் மழை நீர் மற்றும் பெணுகொண்டாபுரம் ஏரி உபரி நீர் ஆதாரமாக உள்ளது. நீர்மட்டம், 18.6 அடியை எட்டியதால் ஐந்து கண் மதகு வழியாக நீரை வெளியேற்றுகின்றனர். திறந்து விடப்படும் உபரி நீர், அனுமந்தீர்த்தம் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலந்து ஆர்ப்பரித்து செல்கிறது.

* அடித்து சென்ற வாகனங்கள்

ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி, ஊத்தங்கரை அண்ணா நகர், காமராஜர் நகர் குடியிருப்புகளுக்குள் உபரி நீர் புகுந்தது. திருப்பத்துார் சாலையிலுள்ள பரசனேரி ஏரி நிரம்பியதால், உபரி நீர் காட்டாற்று வெள்ளம் போல பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நிறுத்தி இருந்த 40 கார், வேன்களை அடித்து சென்றது. அவற்றை 'பொக்லைன்' மூலம், கயிறு கட்டி மீட்கும் பணியில், பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி, சாலைகள், வணிக வளாகம், போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்ற வளாகம் ஆகியவற்றில் நீர் புகுந்தது. அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டன. காட்டாகரம் பெரிய ஏரி, கங்காவரம் ஏரி, பெணுகொண்டாபுரம் ஏரிகள் நிரம்பி, வெளியேறிய உபரி நீரால், பாம்பாறு அணைக்கு செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விளைநிலங்கள் மூழ்கின. காவேரிப்பட்டணம் பாலேகுறி ஏரி நிரம்பி, குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளிலும் வீடுகளில் மழைநீர் புகுந்தது.

மூவர் மாயம்

விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் ஏரி உடைந்து, விழுப்புரம் - செஞ்சி சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. டாஸ்மாக் கடை விற்பனையாளர் சக்திவேல், 50, உள்ளிட்ட இருவர் சென்ற இரு சக்கர வாகனம், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் சக்திவேல் இறந்தார்; மற்றொருவர் நிலை தெரியவில்லை.புதுச்சேரி, கொம்பாக்கம் மனோகரன், 69, அவரது மனைவி பத்மாவதி, 63, ஆகியோர், இரு சக்கர வாகனத்தில், விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தை ஆற்றுப் பாலத்தில் சென்றபோது, வெள்ளத்தில் சிக்கி, மனோகரன் இறந்தார்; பத்மாவதி உயிர் தப்பினார்.வி.சாத்தனுார் ஏரி உடைந்து கிராமத்திற்குள் புகுந்ததில், தனலட்சுமி, 63, தனபாக்கியம், 62, ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

அமைச்சர்கள் கார் மறிப்பு

நெல்லிக்குப்பத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்களின் காரை மறித்து, பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், கடலுார் மாவட்டம் விஸ்வநாதபுரம், வான்பாக்கம், சோழவல்லி, முள்ளிகிராம்பட்டு, திருக்கண்டேஸ்வரம் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்து, வீடுகளை சூழ்ந்தது.அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட வந்தனர். மக்கள் திரண்டு வந்து, அமைச்சர்கள் காரை வழிமறித்து நிறுத்தினர்.'ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாப்பாட்டிற்கே சிரமப்படுகிறோம்; அதிகாரிகள் வந்து பார்த்து செல்வதோடு சரி. எந்த உதவியும் கிடைக்கவில்லை. நீங்கள் வந்து பார்த்து என்ன செய்ய போகிறீர்கள்' என, ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.பொதுமக்களை சமாதானம் செய்த அமைச்சர்கள், உடனடியாக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி, நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டனர். அதன்பின், அமைச்சர்களின் கார்கள் செல்ல வழிவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

visu
டிச 03, 2024 18:54

ஒரு அ ரசாங்கத்தின் பணி என்ன எங்க எங்க மக்கள் வசிகிறார்கள் வீடுகள் இருக்கின்றன .யாருக்கு அபாயம் உள்ளது என்று தெரிந்து அவர்களை பாதுகாத்து உதவி செய்வதுதான் இத்தேர்வுக்கு அமைச்சர் தேவையில்லை அந்த பகுதி அரசு அதிகரிகள் வேலை செய்தாலே போதும் அமைச்சர் வராமலே வேலை நடக்க வேண்டும் அதற்கு அனுபவமும் திறமையும் வேண்டும் .


Sridharan s
டிச 03, 2024 12:56

In Mumbai rainfall always continuous 2to 3 months. Still peoples are doing their regularly. After 2hours road will ne clear.


Guna Gkrv
டிச 03, 2024 11:38

அறிவாளிகளா இயற்க்கையை எந்த கொம்பனாலும் ஒன்னும் செய்ய முடியாது, என்ன தடுப்பு போட்டாலும் தடுக்க முடியாது அதை புரிந்து கொள்ளுங்கள் மர மண்டைகாளா, திரு மோடி வந்தாலும் முடியாது பேசுகிற அறிவாளிகள் யாரு வந்தாலும் தடுக்க முடியாது, பேசுவதை விட்டு விட்டு, முடிந்தால் போய் உதவி பண்ணுங்கள் அதை விட்டு விட்டு பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். அரசாங்கத்தை குறை சொல்லுவதை விட்டு விட்டு உதவி செய்யுங்கள் உங்களால் முடிந்தால்.


SUBRAMANIAN P
டிச 03, 2024 14:25

ஐயா.... இயற்கையை யாராலும் தடுக்க முடியாது.. அது சரிதான் . இதை புதுசா யாரும் சொல்ல வேண்டியது இல்ல.. ஆனா பெய்த மழைநீர் நாட்கணக்குல தேங்கி நிற்கவும், விரைவாக வடியாமல் போவதற்கும் யார் காரணம். ஆக்கிரமிப்பாளர்களும், கையூட்டு வாங்கிக்கொண்டு அதை தடுக்க தவறிய அரசும், அரசு அதிகாரிகளும்தானே. படித்த அறிவாளிகளுக்கா பஞ்சம் தமிழ்நாட்டில். பக்கவா மழைநீரை திட்டமிட்டு சேமிக்கும் வழிகளை செய்தால் ஏன் மக்களுக்கு இவ்வளவு அவஸ்தை. தயவு செய்து சொம்பு அடிக்காதீங்க அரசியல்வாதிகளுக்கு.


M Ramachandran
டிச 03, 2024 10:01

தமிழகத்தில் இந்த கால ஆட்சியில் இருந்தது. அவர்கள் மக்கள் பிரச்சனயை காவலில் கொள்ள மாட்டார்கள். நீண்ட கால திட்டமிடல் கேள்வி குறி. மிக எளிதாக எடுத்துக்கொள்வார்கள். மக்களை மிக ஏளனமாக நினைத்து தேர்தல் நேரத்தில் எலும்பு துண்டு போடுவது போல் இலவசங்களை அள்ளி விட்டு கையூட்டாக சில லட்சங்களை அள்ளி விட்டு பதவியில் உட்கார்ந்து போலீசை தலையாட்டி பொம்மையாக்கி எதிர் கட்சியை காரங்களை பொய் வழக்குக்கு புனைந்து சிறையில் தள்ளி விடுவார்கள். மத்திய அரசை தனக்குள் கட்சி MPகளை காட்டி மிரட்டி வேண்டிய பணத்தய் வாங்கி குடும்பத்திற்கு ஒதுக்கி விடுவார்கள். இப்போது முன்பு போல் இல்லை பணிந்து போக வேண்டிய நிலை அதற்கும் தயாராகி விட்டார்கள்.


Constitutional Goons
டிச 03, 2024 08:41

பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் இந்துக்களின் சிற்பி மோடியின் டிரில்லியன் டாலர் பொருளாதார களஞ்சியம் மும்பை மாநகர் முழுவதும் ஒரே நாளில் 90 கிம் மழை கொட்டி மாநகரம் முழுவதும் மிதந்து, இனியும் மத்திய அரசு ஒரு தீர்வு காணவில்லை . ஒரு சிலர் கொள்ளையடிப்பது தெருவில் உள்ள குண்டர்கள் கொள்ளையடிப்பது மட்டும் கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டது


Svs Yaadum oore
டிச 03, 2024 09:09

அடுத்து ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதி கொடுக்கவில்லை, ஒன்றிய அரசு தமிழன் வரிப்பணத்தை எடுத்து கொண்டு பழி வாங்குது என்று கிளப்பி விட்டால் பிரச்னையை திசை திருப்பி விடலாம் .. அப்படியே வங்கியில் வங்கி மேனேஜர் ஹிந்தியில் பேசறான் என்று திராவிட அக்கா கவர்னர் மாளிகைக்கு மெழுகுவத்தி ஊர்வலம் போகலாம் ...


Svs Yaadum oore
டிச 03, 2024 07:29

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையை உடைத்துக் கொண்டு, நுாற்றுக்கணக்கான கிராமங்களும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் தத்தளிக்கின்றன. ரயில், பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. நெல்லிக்குப்பத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்களின் காரை மறித்து, பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத விடியல் ஆட்சி விடிந்து விட்டது.


Svs Yaadum oore
டிச 03, 2024 07:25

சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பெண்ணையாற்றில் நீர் திறந்து விடப்பட்டது. அதனால், மூங்கில்துறைப்பட்டில் நீர் சூழ்ந்தது. அதில், 30 வீடுகள் அடித்து செல்லப்பட்டனவாம். எந்த எச்சரிக்கை நடவடிக்கை இன்றி சாத்தனுார் அணை திறக்கப்பட்டது எப்படி?? இங்கு மக்கள் உயிருக்கு யார் பொறுப்பு??? இதில் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடக்குதாம். இதுக்கும் ஒன்றிய அரசுதான் காரணம் என்று மதுரை பாராளுமன்றம் ஊளையிடலாம்.. மக்கள் உயிருக்கும் உடமைக்கும் விடியல் திராவிடனுங்க கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான்


Kasimani Baskaran
டிச 03, 2024 06:38

அரை நூற்றாண்டாக திராவிடர்கள் தலையெடுத்து பின்னர் எந்த ஒரு நீர் வழிப்பாதையும் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஆகவே மழை வரும் பொழுது இயற்கையே இதை சரி செய்ய முயற்சிக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


ديفيد رافائيل
டிச 03, 2024 05:51

இந்த வருடம் வெள்ளம் வராமல் இருக்க சென்னையை மட்டுமே கண்காணித்த தமிழக அரசு தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை கண்டு கொள்ளவில்லை என்பது இந்த மழையின் போது தெளிவாக தெரிகிறது. Villupuram மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையே முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. ரயில் போக்குவரத்து கிடையாது, Bus போக்குவரத்து கூட ஒருசில இடங்களில் இல்லை. இத்தனைக்கும் Villupuram district கடலோர பகுதி கிடையாது.


ديفيد رافائيل
டிச 03, 2024 05:30

அனைத்திற்கும் சென்னைக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுக்கும் தமிழக அரசு மற்ற மாவட்டங்களை கண்டு கொள்ளவில்லை என்பது இந்த மழையின் மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது. தமிழக அரசானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்து இருந்திருக்க வேண்டும், சென்னைக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்ததன் விளைவு மழைக்கே பொறுக்காமல் மற்ற மாவட்டங்களில் வேலையை காண்பித்து விட்டது.


சமீபத்திய செய்தி