உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் உருவானது பெஞ்சல் புயல்

வங்கக்கடலில் உருவானது பெஞ்சல் புயல்

சென்னை: வங்கக்கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது.வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே நிலை கொண்டு இருந்தது. முன்பு இது புயலாக மாறாது என வானிலை மையம் நேற்று கூறியிருந்தது. ஆனால், இன்று காலை, அடுத்த சில மணி நேரங்களில் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=02qizwfz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகல் 2:30 மணிக்கு புயலாக வலுவடைந்தது என அறிவித்துள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவ.30) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 60 முதல் 70 கி.மீ., வரையிலும், அதிகபட்சமாக 90 கி.மீ.,வரையிலும் காற்று வீசக்கூடும். கடல் சீற்றமாக காணப்படும் எனவும் கூறியுள்ளது.இந்த புயல் தற்போது புதுச்சேரிக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்கிறது.புயல் எச்சரிக்கைகடலூர், புதுச்சேரியில் 7 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 6ம் எண், காரைக்கால், நாகை துறைமுகங்களில் 5ம் எண், பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.மழைசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை