உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

8 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5:30 மணிக்கு மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது.சென்னைக்கு சுமார் 800 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது. நாளை காலை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புயலாகவும் உருவெடுக்கும். தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் தீவிர புயலாக வலுவடையும். பின், ஆந்திர கடலோர பகுதிகளில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகே தீவிர புயலாக, அன்று மாலை முதல் இரவுக்குள் கரையை கடக்கும்.இந்த நேரத்தில் 90 - 100 கி.மீ., வேகத்திலும், சில நேரங்களில் 110 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும். இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யும். நாளை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.கனமழை அத்துடன், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் கனமழை பெய்யும். நாளை மறுதினம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

murugan
அக் 26, 2025 09:15

தமிழகத்தில் பெரிய அளவு மழை பாதிப்பு இருக்கக் கூடாது ஏற்கனவே விவசாயிகள் நெல்மணிகள் மூழ்கி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு இன்னும் பாதிப்பு வர வேண்டாமே


Field Marshal
அக் 26, 2025 09:06

கார்பொரேஷன் பணியாளர்கள் சாம்பார் சாதம் தயாரிக்கும் ஆயத்த பணிகளில் ஈடுபடுவார்கள்


முக்கிய வீடியோ