உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலாக்கா ஜலசந்தியில் உருவானது சென்யார் புயல்; வானிலை ஆய்வு மையம்

மலாக்கா ஜலசந்தியில் உருவானது சென்யார் புயல்; வானிலை ஆய்வு மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் புயல் உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டு உள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மலேஷியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டு உள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் மேலும் வலுவடைந்து நகரக்கூடும். இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பெரிய பாதிப்பும் இருக்காது. குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். அதன்பின், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், டிசம்பர், 1ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

HoneyBee
நவ 26, 2025 14:22

யப்பா அதை விடுங்க வரும் போது கட்டாயம் வச்சு செய்யும்... ஏன் அவசரம்


sundarsvpr
நவ 26, 2025 13:39

புதுச்சேரிக்கு அருகில் சென்னை உள்ளது. சென்னைக்கு மழை ஏன் பயப்படுகிறது. இயற்கைகு சென்னை பிடிக்கவில்லையென்றால் கொடிய மழை பெய்யலாமே? தமிழ்நாடு அரசு நாஸ்திக அரசாக இருந்தாலும் மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எனவே இயற்கை யோசனை செய்துக்கொண்டு இருக்கலாம்.


கனோஜ் ஆங்ரே
நவ 26, 2025 14:16

மழையும், பெருவெள்ளமும் வரணும்... சென்னை மக்கள் கஷ்டப்படணும், அதைப் பார்த்து நீயும் உன்னைப் போன்ற ஆட்களும் சந்தோஷப்பட்டுக்கணும்... இதுதானே உன் ஆசை...? வாய்ப்பில்ல, ராசா...? உன்னோட கெட்ட எண்ணம் என்னென்னு தெரியுது...? வாய்ப்பில்ல ராசா, நடக்காது ராசா...? டிசம்பர் வரைக்கும் நீ நினைச்சது நடக்காது ராசா..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை