உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைனில் சம்பாதிக்கும் ஆசை யாரை விட்டது?: ஒரே மாதத்தில் 50 இல்லத்தரசிகளிடம் ‛‛அபேஸ்

ஆன்லைனில் சம்பாதிக்கும் ஆசை யாரை விட்டது?: ஒரே மாதத்தில் 50 இல்லத்தரசிகளிடம் ‛‛அபேஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக வேலை தருவதாக கூறி ஒரே மாதத்தில் 50க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகளிடம் ரூ.50 லட்சத்திற்கும் மேல் மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.இப்போது உள்ள காலங்களில் 'வீட்டில் இருந்து வேலை' பிரிவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் போலியான மற்றும் மோசடி செய்வதற்கான அறிவிப்பாகவே இருப்பதும் கவலைக்குரிய விஷயம் தான். குறிப்பாக இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தே ஏதாவது வேலை செய்து தங்கள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்ற எண்ணத்தில் இதுபோன்ற வேலைவாய்ப்புகளை அதிகம் தேடுகின்றனர். அப்படியான இல்லத்தரசிகளை குறிவைத்தே சில மோசடி பேர்வழிகள் அதிகரித்து வருகின்றனர்.அந்த வகையில், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருமணம் முடிந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் ஏராளமான இளம்பெண்களின் சமூக வலைதள கணக்குகளில் மர்ம நபர்கள், குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை பதிவிடுகின்றனர். இதை நம்பும் இல்லத்தரசிகள், இளம்பெண்கள் அவர்கள் கூறும் டாஸ்க்குகளை செய்து குறைந்த அளவு தொகையை முதலீடு செய்கின்றனர். ஆன்லைனில் அவர்கள் கூறும் வேலையையும் செய்து கொடுக்கின்றனர். அதற்கு பரிசு தொகையாக அதிகளவு பணத்தை வழங்கி ஆரம்பத்தில் ஆசையை தூண்டுகின்றனர் மர்ம நபர்கள். இதன் மூலம் நம்பகத்தன்மை அதிகரித்த பெண்கள் கூடுதல் தொகையை மர்ம நபர்களின் வங்கி கணக்கில் முதலீடு செய்கின்றனர். அப்போது பணத்தை 'அபேஸ்' செய்து விட்டு மர்ம நபர்கள் தலைமறைவாகின்றனர். அதன்பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர். இது தொடர்பாக சிலர் போலீசில் புகாரளித்தாலும், பலரும் வெளியே தெரிந்தால் அவமானம், பிரச்னை எனக் கருதி மவுனமாக கடந்து சென்றுவிடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் மட்டும் 50 இளம்பெண்கள் மொத்தம் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை ஆன்லைனில் இழந்ததாக திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தனர். போலீசாரும், ஒருசிலரது வங்கிகணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
பிப் 17, 2025 20:10

இது போல ஏமாற்றும் தொழில் தமிழகத்தில் மட்டுமே சக்கைப்போடு போடுது ...... இல்லன்னா மொழியை வெச்சு வந்தேறிகள் எழுபது வருசமா தமிழனை மூளைச் சலவை பண்ண முடியுமா ????


R S BALA
பிப் 17, 2025 17:44

ஆன்லைன் மூலமாகமட்டுமே கடன் அட்டை கிரெடிட் கார்டு வழங்க முடியும் என பல வங்கிகள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக என்னை தொந்தரவு செய்கின்றன ஆனால் ஏதேனும் ஒரு கிளை மூலமாக வழங்கினால் மட்டுமே அதனை பெறுவதாக தொடர்ந்து மறுத்து வருகிறேன்.. ஏனெனில் ஆன்லைனில் நம்பகத்தன்மை மிகக்குறைவு, இந்தலட்சணத்தில் முதலீடு ஆன்லைன் மூலம் எப்படி.. ஏமாற்றுவலையில் தானே போய் சிக்குவதற்கு சமம்..


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 17, 2025 16:52

வாட்ஸ்அப் செயலில் தற்போது குறிப்பிட்ட குரூப்பில் இல்லாத நெம்பரில் இருந்து கூட இந்த மாதிரியான மெஸேஜ் வருகிறது. குரூப்பில் இல்லாத நெம்பரில் இருந்து மெஸேஜ் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. வாட்ஸ் ஆப் குரூப் அட்மின்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குரூப்பை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்க வேண்டும்.


ديفيد رافائيل
பிப் 17, 2025 17:49

Community post enable பண்ணி வச்சிருந்தா whatsapp group ல இல்லாதவங்க கூட Message sent பண்ணிக்கலாம். Community post disable பண்ணி வைக்கனும் whatsapp group ல்.


முக்கிய வீடியோ