உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு பெருமாள் -05

தினமும் ஒரு பெருமாள் -05

நிலப்பிரச்னையா...

நிலம் சம்பந்தமான பிரச்னையை தீர்க்கிறார் விழுப்புரம் மாவட்டம் பெரமண்டூரில் உள்ள வராகப்பெருமாள். இரண்யாட்சன் என்ற அசுரன் தான் பெற்ற வரத்தால் தேவர்களை துன்புறுத்தினான். இதைக் கண்ட பூமாதேவி பெருமழையை பொழியச் செய்து பூமியை வெள்ளக்காடாக மாற்றினாள். இதனால் அசுரனின் பாதாள உலகம் அழுந்தியது. கோபம் கொண்ட அசுரன் பூமியைப் பாய்போல் சுருட்டிச் சென்று கடலில் மறைத்து வைத்தான். இதை மீட்க வராக (பன்றி) அவதாரம் எடுத்து அசுரனை அழித்தார் பெருமாள். இவரது உக்கிரத்தை தணிக்க தேவர்கள் மண்டியிட்டு வழிபட்டனர். மனம் குளிர்ந்த வராகப்பெருமாள் பூமாதேவியோடு காட்சி அளித்தார். மண்டியிட்டு வழிபட்டதால் இத்தலம் 'பெருமண்டியூர்' என பெயர் பெற்றது. இதுவே தற்போது பெரமண்டூர் என அழைக்கப்படுகிறது.இங்கு பூமாதேவியை மடியில் இருத்திய கோலத்தில் காட்சி தருகிறார் வராகப்பெருமாள். தொடர்ந்து ஐந்து சனிக்கிழமை நெய் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் நிலப்பிரச்னை தீரும். திண்டிவனத்தில் இருந்து 8 கி.மீ., நேரம்: காலை 8:00 - 10:00 மணி மாலை 5:00 - 7:00 மணி தொடர்புக்கு: 63805 72496, 70923 19458அருகிலுள்ள தலம்: அச்சிறுப்பாக்கம் மரகத தண்டாயுதபாணி 36 கி.மீ., நேரம்: காலை 7:30 - 12:00 மணி மாலை 4:30 - 7:00 மணிதொடர்புக்கு: 73971 71931, 94432 09267


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை