உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-5

தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-5

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

வளமான வாழ்வுக்கு...

கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வரக்கால்பட்டியில் பூரணி, பொற்கலையுடன் வில்லுக்கட்டி அய்யனார் காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் வாழ்வு வளம் பெறும். இப்பகுதிக்கு கூலி வேலைக்கு வந்த குடும்பத்தினர் புதருக்குள் அய்யனார் சிலை இருப்பதை பார்த்தனர். பின் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். பாதுகாப்பான பயணத்திற்காக இவரை வழிபடுகின்றனர். வேண்டுதலை சீட்டில் எழுதி தலவிருட்சத்தில் கட்டுகின்றனர். நேர்த்திக்கடனாக பொங்கல் வைக்கின்றனர். வைகாசியில் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது.கடலுாரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 4 கி.மீ., நேரம்: அதிகாலை 5:00 - காலை 10:00 மணிதொடர்புக்கு: 99653 67210அருகிலுள்ள தலம்: பாடலீஸ்வரர் கோயில் (4 கி.மீ.,)நேரம்: காலை 7:00 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 94433 04978


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி