உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசுக்கான அபாய மணி

தி.மு.க., அரசுக்கான அபாய மணி

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: 'கோவில் சொத்து கோவிலுக்கே' என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு வரவேற்புக்கு உரியது. கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, தி.மு.க., அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இது குறித்து தமிழகம் முழுதும் உள்ள கோவில்களுக்கு, ஹிந்து சமய அறநிலைய துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அனுப்ப தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களையும், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளையும், கோவில்களுக்கும், ஹிந்து சமய வளர்ச்சிக்கும் பயன்படுத்தாமல், வணிக வளாகம் கட்டும் போர்வையில், நிதியை சுரண்டிய தி.மு.க., அரசுக்கான அபாய மணியே, உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு. தீர்ப்பின் வாயிலாக, ஹிந்து சமய கோவில்களின் நிதியை காத்த, உயர் நீதிமன்றத்திற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ