உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு: கவர்னர் ரவி பேச்சு

கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு: கவர்னர் ரவி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடை பெற்றுள்ளது என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த போதைப்பொருள் தடுப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் போதைப்பொருட்கள் வெளியில் இருந்து வருவதில்லை. இங்கேயே உருவாக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடை பெற்றுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

அடிமை

கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவது நாட்டின் எதிர்காலத்தையும், கலாச்சாரத்தையும் பாதிக்கிறது. கடந்த ஆண்டு கள்ளச்சாராயத்தால் விழுப்புரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் இந்த ஆண்டு அதே போல மற்றுமொரு சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தை போதைப்பொருட்கள் பெரிய அளவில் பாதிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vaiko
ஜூன் 25, 2024 21:54

இவர் வாயில் kaள்ள சாராயத்தை ஊற்ற வேண்டும். சனாதனம்தான் கள்ள சாராயம் ஆறாக ஓட பெருக்கெடுத்து காரணம்


hari
ஜூன் 25, 2024 20:38

மும்பை டாஸ்மாக் வந்தாச்சு..... வாழ்க மும்பை உபிஸ்


Narayanan Muthu
ஜூன் 25, 2024 18:51

கள்ள சாராயம் குடிச்சா சாகத்தான் செய்வான். சாகட்டும்னு சொன்ன நிதிஷ்குமார் ஆதரவில் மைனாரிட்டி அரசு குறித்து இவரை வாயை திறக்க சொல்லுங்களேன் பார்ப்போம்.


Kasimani Baskaran
ஜூன் 25, 2024 21:30

கள்ளச்சாராயம் தமிழகத்தில் காய்ச்சி அதற்க்கு மூலப்பொருள் பாண்டிச்சேரியில் இருந்து வந்ததாக காவல்துறை போட்ட நாடகத்தில் தமிழக அரசே கேவலப்பட்டுப்போய் நிற்கிறது. ஆனாலும் இது போன்ற அறிவாளிகள் உருண்டு கொண்டே உருட்டுவதை மட்டும் விடவே இல்லை.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 25, 2024 18:23

அய்யா... நீங்க பிறந்த மண்ணில் இருந்து இதை ஆரம்பிக்கலாமே... குஜராத்தில் போன மாசம்கூட கிலோக்கணக்கில் பிடிச்சாங்களே... கோகைன், பவுடர்...னு சொல்ற போதை பொருட்களெல்லாம் பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக இந்தியாவுக்குள்ளரா நுழையுது.. ... நாடே சொல்லு... இவையெல்லாம் தமிழ்நாட்டில் விளையாது அய்யா...


Kasimani Baskaran
ஜூன் 25, 2024 20:05

அயலக அணித்தலைவர் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் பொழுது எப்படித்தான் இப்படியெல்லாம் பொய் சொல்ல முடிகிறதோ...


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 21:59

பிடிபட்டது குஜராத்தை தாண்டி நடுக்கடலில். கடத்தியது தமிழக ஆட்களுக்காக.. திசை திருப்பி ஏமாற்றுவது திருட்டு ஜாஃபர் முன்னேற்றக் கழகம்.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 22:00

கவர்னர் பிறந்தது மதுவிலக்கு அமலில் உள்ள பிஹாரில். இன்றைய உ.பி ஸ் 200 பேமென்ட் கட்.


Kasimani Baskaran
ஜூன் 25, 2024 17:54

அரை நூற்றாண்டு திராவிட போதை அதை விட கெடுதலானது


மேலும் செய்திகள்





புதிய வீடியோ