பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாக்யலட்சுமி 55, உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏப். 26ல் நடந்த வெடிவிபத்தில் சொக்கம்பட்டி மாரியம்மாள் 51, கூமாபட்டி திருவாய்மொழி 48, எம். சொக்கலிங்கபுரம் கலைச்செல்வி 35, ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் இதில் 100 சதவீதம் காயம் அடைந்த எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த பாக்யலட்சுமி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் உயிரிழந்தார். காயமடைந்த கோமதி 55, பாத்திமுத்து 55, ராபியா பிவீ 50, ராமசுப்பு 43, லட்சுமி 40, முனியம்மாள் 40, தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.