உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணிக்கு மணி உயரும் சாவு எண்ணிக்கை: இதுவரை பலி 52: கதற வைக்குது கள்ளச்சாராய சோகம்

மணிக்கு மணி உயரும் சாவு எண்ணிக்கை: இதுவரை பலி 52: கதற வைக்குது கள்ளச்சாராய சோகம்

சேலம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரித்தது. இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 150க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு, கண்பார்வை குறைவு மற்றும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேர் நேற்று முன்தினம்( ஜூன் 19), நேற்று 23 பேர் இறந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் அபாய கட்டத்தில் உள்ளதால், அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இன்று (ஜூன் 21) காலை நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 28 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 17 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர்.கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களும், புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. அதில் 21 பேரது நிலைமை கவலைக்கிடமாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Barakat Ali
ஜூன் 22, 2024 00:05

எனக்கு புடிச்ச பாட்டு ஸ்டாலின்தான் வர்றாரு ......... விடியல் தரப்போறாரு ன்ற பாட்டுதான் ..... சூப்பர் ஹிட் அடிச்ச பாட்டு அது .........


Barakat Ali
ஜூன் 22, 2024 00:04

மக்கள் வரிப்பணம்தான் என்றாலும் இதுக்கு மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது ???? ஒன்றியம் கொடுக்கல ன்னு அடிச்சு விட்டீர்களே ????


Jysenn
ஜூன் 22, 2024 00:01

ஓட்டு போட்ட ரெண்டாவது மாசம் சூப்பர் விடியல் . எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத சூப்பர் விடியல் . விடிஞ்சா பத்து லக்ஷம். மக்களை ஊக்கு விக்கும் விடியல். திராவிட மாடல் விடியல் .செத்தவனுக்கும் விடியல் . அவன் குடும்பத்திற்கும் பூரண விடியல் .


Jysenn
ஜூன் 22, 2024 00:01

ஓட்டு போட்ட ரெண்டாவது மாசம் சூப்பர் விடியல் . எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத சூப்பர் விடியல் . விடிஞ்சா பத்து லக்ஷம். மக்களை ஊக்கு விக்கும் விடியல். திராவிட மாடல் விடியல் .செத்தவனுக்கும் விடியல் . அவன் குடும்பத்திற்கும் பூரண விடியல் .


konanki
ஜூன் 21, 2024 23:00

கான்ஸ்டபிள் முதல் ஐஜி வரை , கிளை செயலாளர் முதல் அமைச்சர் வரை, வி ஏ ஓ முதல் தலைமை செயலக அதிகாரிகள் வரை அனைவரும் ஊழல் லஞ்சம் வாங்கி கள்ள சாரயத்தை அனுமதித்தனர் . விளைவு 52 மரணம். இந்த மரணங்களுக்கு காரணம் திமுக வின் ஊழல்.அதை ஏற்றுகொள்ளும் சமுதாயம்


Kasimani Baskaran
ஜூன் 21, 2024 22:43

திராவிட சாராய மாடலின் சோகங்கள்.... நாற்பதும் நமதே என்று சொல்லி வாயை மூடும் முன் இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் - பதவி வேண்டாம் என்று ஓடிப்போன எஸ்பி உண்மையிலேயே தீர்க்கதரிசிதான். ஒரு சில ஐபிஎஸ் அதிகாரிகள் மிரட்டல்களை சட்டை செய்யாமல் சாராய கோஷ்டிகளை அடித்து நிமிர்த்தத்தான் செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த பரிசு இட மாற்றம்தான். நல்ல வேளையாக விடியல் அரசால் ஒய்வு பெறுவதற்கு முன் அவர்களை களங்கப்படுத்த முடியவில்லை.


sridhar
ஜூன் 21, 2024 20:48

இறந்தவர்களில் , அவர்கள் குடும்பங்களில் எத்தனை பேர் திமுகவுக்கு வோட்டு போட்டாங்க .


Anantharaman Srinivasan
ஜூன் 21, 2024 20:38

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் சொரணை கெட்ட அரசு. நடப்பதை மறைத்து கட்சிகாரனை மாமூல் வாங்கி பிழைக்க வைத்து மக்கள் உயிருடன் விளையாடும் கேடு கெட்ட மந்திரிகள்.


V RAMASWAMY
ஜூன் 21, 2024 19:50

கள்ளச்சாராயம் என்ற பெயரே அதில் கள்ளம் அதாவது குற்றம் இருக்கிறது என்று பொருள் கொள்கிறது. பின் அந்த குற்றவாளிகள் குடும்பத்திற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து ரூபாய் பாத்து லட்சம் கொடுப்பது ஒரு கேட்ட முன்னோடி, அது குற்றவாளிகளை ஊக்குவிப்பதைத்தான் தெரிகிறது. இதனால் மோசமான ஏழ்மை நிலையுள்ளவர்கள் வாழ்க்கையில் உயர இம்முறையைக் கடைப்பிடிக்க வழி வகுக்கும்.


Raj S
ஜூன் 21, 2024 18:12

எந்த கொம்பனாலயும் குறை சொல்ல முடியாத ஆட்சி... ஒரு குடும்பமே தமிழகத்தை காலி பண்ணுது... அறிவில்லாத ஜனங்க அவுங்ககிட்ட காச வாங்கிட்டு ஓட்டு போடுது...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை