உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மூத்த குடிமக்களிடம் கையொப்பம் பெற்று ரேஷன் வழங்க முடிவு

 மூத்த குடிமக்களிடம் கையொப்பம் பெற்று ரேஷன் வழங்க முடிவு

சென்னை: 'மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும்போது, கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைகளில் வழங்க இயலாத நிலையில், பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பொருட்களை வழங்க வேண்டும்' என, ரேஷன் ஊழியர்களுக்கு, உணவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், மாதந் தோறும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே, உணவு பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டத்தை, அரசு துவக்கியுள்ளது. அதன்படி, கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று, கார்டுதாரரின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்குகின்றனர். தொலைதொடர்பு சிக்னல் பிரச்னையால், கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு செய்ய முடிவதில்லை. இதனால், பொருட்கள் வழங்கப்படாமல், கார்டுதாரர்களை அலைக்கழிப்பு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, 'வீடு தேடி பொருட்கள் வினியோகம் செய்யும்போது, கைரேகை சரிபார்ப்பு முறை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத நிலையில், பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பொருட்களை வழங்க வேண்டும்' என, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, தமிழக உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nagarathinam
டிச 25, 2025 11:39

ரேஷன் கடைகளில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவு போட்டும் எனக்கு வயது 71 எனது மனைவிக்கு 63 வயது. எங்களுக்கு வீட்டிற்கு வந்து விநியோகம் செய்ய மறுக்கிறார்கள். கேட்டால் எஎனது மனைவிக்கு 65 வயதுக்கு மேலிருந்தால் தான் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுப்போம் என்று கூறுகிறார்கள்..எங்களுக்கு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொண்டு வந்து கொடுக்க தமிழ்நாடு வாணிப கழகம் நடவடிகௌகை எடுக்க வேண்டும்.


Ulaganathan Periyasamy
டிச 24, 2025 23:23

இவ்வளவு நாள் பத்து வெரல வச்சி ரேக பதியவில்லை. இனிமேலாவது சரியானா பரவாயில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை