உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9 மாவட்டங்களில் ரூ.1,200 கோடியில் 12 துணைமின் நிலையம் அமைக்க முடிவு

9 மாவட்டங்களில் ரூ.1,200 கோடியில் 12 துணைமின் நிலையம் அமைக்க முடிவு

சென்னை: கூடுதல் மின்சாரத்தை கையாள, ஒன்பது மாவட்டங்களில், 1,192 கோடி ரூபாயில், 12 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழகம் முழுதும் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப, கூடுதல் மின்சாரத்தை கையாள, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களில், 1,192 கோடி ரூபாயில், 12 துணை மின் நிலையங்கள் அமைக்க மின் தொடரமைப்பு கழகம் முடிவு செய்துள்ளது. அதாவது, 400 கிலோ வோல்ட் திறனில் ஒன்றும், 110 கிலோ வோல்ட் திறனில், 11ம் இடம் பெறுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில், ஓசூர் துணைமின் நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இரு இடங்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரு இடத்தை அடையாளம் காணும் பணி நடக்கிறது. அம்மாவட்டத்தில், 400 கி.வோ., திறனில் ஒன்று, 110 கி.வோ., திறனில் ஒன்று என, இரு துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. செங்கல்பட்டு, நாமக்கல் மாவட்டங்களில் தலா இரண்டு; சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சை மாவட்டங்களில், 110 கி.வோ., திறனில் தலா ஒரு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:துணைமின் நிலையங்கள் அமைக்க தேர்வாகியுள்ள மாவட்டங்களில், இடங்களை அடையாளம் கண்டு விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இடங்கள் இறுதியானதும், விரைந்து திட்ட மதிப்பீடு தயாரித்து அரசிடம் ஒப்புதல் பெற்று, துணைமின் நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி