உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்

 குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் 2025 நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து நவ.27ல் 140.20 அடியை எட்டியது. அதன்பின் மழை குறைந்து நீர்வரத்தும் குறையத் துவங்கியது. கடந்த ஒரு மாதமாக மழையின்றி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 131.70 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 150 கன அடியாக இருந்தது. லோயர்கேம்ப் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய தம்பதியின் உடலை தேடும் பணிக்காக அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீர் நிறுத்தப்பட்டது. இதனால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 5094 மில்லியன் கன அடியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை