உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்த 2 கனவுகளுக்காக உழைத்து வருகிறேன்: ஸ்டாலின் பேச்சு

இந்த 2 கனவுகளுக்காக உழைத்து வருகிறேன்: ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றவது, உலகின் மனிதவள தலைநகராக தமிழகத்தை மாற்றுவது ஆகிய 2 கனவுகள் தனக்கு இருப்பதாகவும், அதற்காக முழு ஈடுபாட்டுடன் தன்னைதானே அர்ப்பணித்து வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.சர்வதேச அளவிலான 'உமேஜின்' என்ற தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் இன்று (பிப்.,23) துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டவர், பழனிவேல் தியாகராஜன். நிதித்துறையை போல தகவல் தொழில்நுட்பத்துறையையும் (ஐ.டி) மேம்படுத்தவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அத்துறைக்கு மாற்றினேன். நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=okk2oh8u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐ.டி., துறையில் மாபெரும் பாய்ச்சல் கருணாநிதியின் ஆட்சியில்தான் துவங்கியது. நாட்டின் முதல் ஐடி பார்க்கை கருணாநிதி அமைத்தார். எனக்கு 2 கனவுகள் இருக்கின்றன. அதில் ஒன்று, தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும்; மற்றொன்று, உலகின் மனிதவள தலைநகராக தமிழகத்தை மாற்ற வேண்டும். இதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து வருகிறேன். அனைத்து துறைகளும் அதற்கான செயல்திட்டங்களுடன் சிறப்பாக செயல்படுகிறது. கோவை, மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க் உருவாக்கப்பட இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 94 )

Dhana
பிப் 24, 2024 03:58

4 வீட்டுக்கு ஒரு டாஸ்மாக் கடை திற..... 1 trillion dollar அள்ளலாம், உலகமெங்கும் குடியல் அரசு அமைக்கலாம், மீண்டும் மீண்டும் பல trillion dollar குவிக்கலாம். வாழ்க.... வாழ்க.... டாஸ்மாக் விடியா நாத்திக பன்றிகள் கூட்டம் என்று கோஷமிடுவோம்


Ramesh Sargam
பிப் 24, 2024 00:49

டிரில்லியன்... இதில் எத்தனை பூஜ்ஜியங்கள் இருக்கிறது என்று இவருக்கு தெரியுமா...? சந்தேகம்தான்...


Ramesh Sargam
பிப் 24, 2024 00:47

தூக்கத்திதான் கனவு வரும். ஆனால் இவர் கட்சியினர் ஒருசிலரின் செயல்பாடுகளால் தனக்கு தூக்கம் போச்சு என்று பலமுறை புலம்பி இருக்கிறார். தூங்காமல் எப்படி கனவு? ஒருவேளை அமரர் அப்துல் கலாம் சொன்னது போன்ற கனவா?


theruvasagan
பிப் 23, 2024 22:09

3 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடைய இன்னும் எத்தனை டாஸ்மாக் கடைகள் திறக்கணும் என்பதை சொல்லிட்டாக்க நாங்களும் நம்பிடுவோம் கண்ணை மூடிக்கிட்டு நம்பிடுவோம்.


sankaranarayanan
பிப் 23, 2024 21:12

முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டவர், பழனிவேல் தியாகராஜன். அப்போ ஏனய்யா அவரை முக்கியமில்லாத துறைக்கு மாற்றிநீர்கள் முப்பதாயிரம் கோடி ஊழலைப்பற்றி அண்ணாமலை வெளிகொண்டுவந்த செய்தியை பார்த்ததும் அவருக்கு வேட்டு வந்தது மக்களுக்கே தெரியும் இதை மூடி மறைக்க முடியாது அவரை கட்சியிலிருந்தும் நீக்க முடியாத சூழ்நிலை உள்ளது இதை எதற்காக மூடி மறைக்க வேண்டும்


தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 20:23

ஸ்டாலினின் முதலாவது கனவு உதயநிதியை முதல்வர் ஆக்குவது. ரெண்டாவது கனவு முடிந்தவரை ஊழல் செய்வது.


Shekar
பிப் 23, 2024 19:44

ஒரு டிரிலியனுக்கு எதனை பூஜ்ஜியம், அது எதனை கோடி என்று ஐந்து நிமிடத்தில் யாரையும் கேட்காமல், துண்டு சீட்டு பார்க்காமல் சொல்லிவிட்டாரென்றால் நான் இந்த நாட்டைவிட்டு வெளியேறுகின்றேன்.


இராம தாசன்
பிப் 23, 2024 19:54

ஆசை ஆசை - இங்கேயே இருக்க வேண்டும் என்று. வேற ஏதாவது சொல்லுங்க பாஸ். கணக்கு வராது / ஆங்கிலம் / ஹிந்தி தெரியாது. தமிழும் ததிங்கிணத்தோம் தான்.


Jayaraman Pichumani
பிப் 23, 2024 19:22

இது மாதிரி நிறைய உருட்டுகளைப் பார்த்து விட்டோம்.


R S BALA
பிப் 23, 2024 19:14

தலைப்ப பார்த்தாலே உங்க ரெண்டு கனவு என்னன்னு தெரிஞ்சிபோச்சு...


VENKATASUBRAMANIAN
பிப் 23, 2024 19:05

குடும்பம் செழிக்க பாடுபடுகிறார். இதுதான் திராவிட மாடல்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ