உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 முறை விரல் ரேகை பதிவால் தாமதமாகும் பத்திரப்பதிவு

2 முறை விரல் ரேகை பதிவால் தாமதமாகும் பத்திரப்பதிவு

சென்னை : பத்திரப்பதிவின் போது சொத்து விற்பவர், வாங்குபவர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்வது வழக்கம். இது தொடர்பாக ஆதார் ஆணையம் சில மாற்றங்களை செய்ததால், புதிய மற்றும் பழைய கருவிகள் வாயிலாக விரல் ரேகை பதிவு செய்யப்படும் என, பதிவுத் துறை கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், புதிய கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் தகவல் தொகுப்பில் சேர்த்து வைப்பதற்கும், சரி பார்ப்பதற்கும் என, இரண்டு முறை விரல் ரேகை பெறப்படுகிறது.

இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:

பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம் நடக்க கூடாது என்பதற்காக தான் பதிவுத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில், முதலில் ஒரு கருவியில் விரல் ரேகை பெற்று, அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு கருவியில் விரல் ரேகை பதிய வேண்டும். ஆனால், பதிவுத் துறை கணினி தகவல் தொகுப்புக்கான, 'சாப்ட்வேர்' விரைவாக செயல்படாததால், ஒரு நபரின் விரல் ரேகை பதிவுக்கு, 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால், குறிப்பிடப்பட்ட நேரத்துக்குள் பத்திரங்களை பதிவு செய்ய இயலவில்லை. பொது மக்களும் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரே முறையில் இப்பணியை முடிக்க நவீன வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என, மேலதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை