உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால தாமதமான அறிவிப்பு; பின் தேதியிட்ட வயது வரம்பு; போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு தயாரான பலர் தவிப்பு

கால தாமதமான அறிவிப்பு; பின் தேதியிட்ட வயது வரம்பு; போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு தயாரான பலர் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு தயாராகி வந்த பலர் காலதாமதமான அறிவிப்பாலும், பின்தேதியிட்ட வயது வரம்பாலும் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 1299 போலீஸ் எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் வயது வரம்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2.7.1995 முதல் 1.7.2005க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 1.7.2025ன் கணக்கின்படி 30 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இத்தேர்வுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் தயாராக இருந்தவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அதேசமயம் இவர்களில் பலர் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.அதற்கான காரணம் குறித்து அவர்கள் கூறியதாவது: கடந்தாண்டு ஜூனில் எஸ்.ஐ., தேர்வு அறிவிக்கப்படும் என மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் சொன்னபடி ஜூனில் அறிவிப்பு வெளியாகவில்லை. 9 மாதத்திற்கு பிறகு இந்தாண்டு ஏப்.,4ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலதாமதமான அந்த அறிவிப்பில் 1.7.2025ன் கணக்கின்படி ஆன்லைனில் விண்ணப்பித்த போது 40 நாட்கள், 30 நாட்கள் கூடுதலாக காண்பித்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.அதேசமயம் போலீஸ் துறையில் 20 சதவீதம் கோட்டாவில் போலீசாருக்கு 1.7.2024 என முன்தேதியிட்டு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள எந்த பிரச்னையுமின்றி விண்ணப்பித்து வருகின்றனர். எங்களுக்கு பின்தேதியிட்டு வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் எஸ்.ஐ., கனவு கனவாகவே போய்விடுமோ என வேதனையில் தவிக்கிறோம். போலீசாருக்கு அறிவித்தது போல் எங்களுக்கும் முன்தேதியிட்டு அறிவித்தால் விண்ணப்பிக்க முடியும். எஸ்.ஐ., கனவும் நிறைவேறும். இதுகுறித்து முதல்வரிடம் மனு கொடுக்க சென்றபோது தடுக்கப்பட்டோம். சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். எங்களின் நிலை கருதி அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Barakat Ali
ஏப் 19, 2025 10:40

பணி நியமனங்களில் முன்தேதி / பின்தேதி இடுதலே ஒரு முறைகேட்டின் அறிகுறி .... டூ ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற்பனை அப்படித்தான் நடந்தது .... விற்பனையில் பலரைக் கழித்துக்கட்ட தேதி மாற்றப்பட்டது ..... திருட்டுக்கழகம் தில்லாலங்கடியில் கில்லாடி .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை