உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் கைது; சென்னையில் டில்லி போலீஸ் அதிரடி

வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் கைது; சென்னையில் டில்லி போலீஸ் அதிரடி

சென்னை: சென்னை குன்றத்துார் மற்றும் மாங்காடு பகுதியில், சட்ட விரோதமாக பதுங்கி இருந்த, வங்கதேசத்தை சேர்ந்த, 33 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.கடந்த மாதம் டில்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அதே மாநிலத்தை சேர்ந்த சந்த் மியா, 55 என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள், விசா உள்ளிட்ட எந்த வித ஆவணங்களும் இல்லாமல், சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, டில்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று தமிழகம் வந்தனர். சந்த் மியா கூறிய தகவல் அடிப்படையில், சென்னை அருகே மாங்காடு, அம்பாள் நகரில், சாலையோரம் கொட்டகை அமைத்து தங்கி, பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை சேகரித்து, காயலான் கடையில் விற்பது போல பதுங்கி இருந்த, ஆண்கள், பெண்கள் என, 27 பேரை கைது செய்தனர். குன்றத்துார் அருணாச்சலேஸ்வரர் நகரில், சாலையோரம் பதுங்கி இருந்த, ஆறு பேரையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.அவர்களை கொளப்பாக்கம் சமுதாய கூடத்தில் தங்க வைத்து, சந்த் மியாவை உடன் வைத்துக் கொண்டு, போதைப் பொருள் கடத்தல் தொடர்பு குறித்து விசாரித்தனர். அவர்கள் தமிழகம் எப்படி வந்தனர், என்ன செய்கின்றனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில், தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Natchimuthu Chithiraisamy
ஏப் 29, 2025 18:23

திருப்பூரில் அதிக நபர்கள் இருக்கலாம், கைது பண்ணமுடியாது. சொந்த நாட்டு க்கு போக காலஅவகாசம் கொடுத்து அனுப்பிவிடுங்கள். இது போன்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால், நம் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.


C G MAGESH
ஏப் 29, 2025 17:06

அப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக காவல் துறைக்கு, இதெல்லாம் தெரியாதா ?


என்றும் இந்தியன்
ஏப் 29, 2025 16:41

வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் கைது சென்னையில் டில்லி போலீஸ் அதிரடி???அப்போ சென்னை போலீசார் இப்போது திமுக போலீசார் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனரா என்ன


Ramesh Sargam
ஏப் 29, 2025 12:59

தமிழக போலீஸ் அவர்களை ஏன் கைதுசெய்யவில்லை. தமிழக போலீசுக்கு அவர்கள் அங்கு இருப்பது எப்படி தெரியாமல் போனது?


kumarkv
ஏப் 29, 2025 11:08

எல்லாமே வங்க தேசனுங்க.


selvelraj
ஏப் 29, 2025 11:07

ஐயா, இப்படி அபாண்டமாக தமிழக காவல் துறையை எடை போடமுடியாது. நம்ம அப்பா வேற செப்டம்பர் 6 காவலர் நாளாக அறிவித்து இருக்கார். எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றனர். கள்ளச்சாராயம் இல்லை கஞ்சா இல்லை போதை பொருள் இல்லை. பெண்கள் பாதுகாப்பாக சார் இருக்கார். ஜாபர் சாதிக் மற்றும் ஞான சேகர். பெருமைக்குரிய பட்டியல் ரொம்பவே நீளம்.


shyamnats
ஏப் 29, 2025 09:04

அமலாக்க துறையை சாடியது போல் மத்திய போலீஸின் நடவடிக்கையும் கண்டிக்க வேண்டியதுதான். நாங்களாக செயல் பட மாட்டோம். CAA சட்டம் அமல் செய்ய படுவது காலத்தின் கட்டாயம். ஊரான் பிள்ளைகளை ஊட்டி வளர்க்க முடியானது


karthik
ஏப் 29, 2025 08:39

தமிழ் நாடு தான் டில்லிக்கு out of control ஆச்சே அதுனால டில்லி போலிஸே நேர வந்துட்டாங்க போல..


உண்மை கசக்கும்
ஏப் 29, 2025 07:43

அதானே . டெல்லி காவல்துறை தான் கைது செய்து உள்ளார்கள். தமிழக காவல்துறை தலைவர் நன்றாக தூங்கி கொண்டு இருப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை