உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி உஷ்ஷ்ஷ்: அமித் ஷா என்ன பேசப்போகிறார்?

டில்லி உஷ்ஷ்ஷ்: அமித் ஷா என்ன பேசப்போகிறார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மதுரை பயணம், தமிழக அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. மஹாராஷ்டிரா, உ.பி., குஜராத் என பல மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற வியூகம் அமைத்த அவர், அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, பா.ஜ., தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பேச இருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=39e49gx9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., செய்து வரும் ஊழலால், தமிழகம் எந்த அளவிற்கு நாசமாகி உள்ளது என்பது தொடர்பாக, பல குறிப்புகளை தன்னுடன் கொண்டு வந்துள்ளாராம்.'மத்திய உளவு அமைப்புகள் வாயிலாக, தி.மு.க.,விற்கு எதிராக கிடைத்துள்ள விபரங்கள், தி.மு.க., சீனியர்களே, பா.ஜ., தலைவர்களிடம் 'போட்டுக் கொடுத்த' ஊழல் விவகாரங்கள் என, பலவற்றை பற்றியும் விரிவாக பேசுவார் அமித் ஷா என்கிறது டில்லி பா.ஜ., வட்டாரம்.உள்துறை அமைச்சருக்கு நெருக்கமான குஜராத்தைச் சேர்ந்த 10 நண்பர்கள், தமிழகம் முழுக்க ஏற்கனவே பயணம் செய்து வருகின்றனராம். இவர்கள், தமிழகத்தில் தொழில் செய்யும் சக குஜராத்திகளோடு தொடர்பு கொண்டு, கள நிலவரம் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்; அத்துடன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், ஏற்கனவே தமிழகத்தில் களம் இறங்கிவிட்டது. இவர்கள் வாயிலாக தனக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து, தி.மு.க.,வை ஒரு வழியாக்க திட்டமிட்டுள்ளாராம் அமித் ஷா.'வரும் 2026 தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க துவங்கிவிட்டது. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு முன்பாக, அமித் ஷாவின் தமிழக, 'விசிட்' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது' என, சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜூன் 08, 2025 15:29

இங்கு வந்து தமிழில் பேசாமல் தஸ் புஸ் என்று ஹிந்தியில் என்ன உண்மைகளை பேசினாலும் தமிழக மக்களிடம் எடுபடாது. முதலில் தமிழ் கற்றுக் கொண்டு இங்கு வந்து தமிழில் அரசியல் செய்யுங்கள், ஒருவேளை மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது!


pmsamy
ஜூன் 08, 2025 08:06

தினமலர் உஷ் உஷ் உஷ் உஷ்


திருட்டு திராவிடன்
ஜூன் 08, 2025 04:08

இந்த தமிழகத்தில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது ஏனெனில் திருட்டு திராவிட அயோக்கிய கட்சிகளின் ஆதிக்கம் அவ்வளவு அதிகமாக இருக்கிறது. இலவசத்திற்கு அடிமையாகி அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் எங்கள் மக்களை காப்பாற்ற முடியாது அதற்கு எத்தனை அமித் ஷா வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.