பயங்கரவாதிகளை கைது செய்ய கோரிக்கை
திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கடந்த இரு நாட்களில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், முஜிபுர் ரகுமான், அஷ்ரப் அலி, முஸ்டாக் அகமது உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளது. நேற்று கொடைக் கானலில், 'ஆம்பூர் பிரியாணி' என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வரும் இம்தாதுல்லாவை, என்.ஐ.ஏ., கைது செய்தது. தமிழகத்திலேயே அவர்கள் இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்தபோதும், தமிழக அரசு அவர்களை பிடிக்கவில்லை. தேர்தலில் முஸ்லிம்கள் ஓட்டு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தி.மு.க., அரசு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டு நபர்கள் மற்றும் பயங்கரவாதிகளை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.