உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடங்குளம் மின்சாரம் முழுதையும் தமிழகத்துக்கே தர கோரிக்கை

கூடங்குளம் மின்சாரம் முழுதையும் தமிழகத்துக்கே தர கோரிக்கை

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்படும் கூடங்குளம் மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் யூனிட், 4 - 5 ரூபாய்க்கு வழங்குமாறு, மத்திய மின்துறையிடம், தமிழக மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது.மத்திய அரசின் இந்திய அணுமின் கழகத்துக்கு சொந்தமான, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா, 1,000 மெகாவாட் திறனில், இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி, அண்டை மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. கூடங்குளம் மின் நிலைய வளாகத்தில், 1,000 மெகா வாட் திறனில் மூன்றாவது அணு உலையும், அதே திறனில் நான்காவது அணு உலையும், ரஷ்யா உதவியுடன் அமைக்கப்படுகின்றன. மூன்றாவது அணு உலையில், 2026 டிசம்பரிலும், நான்காவது அணு உலையில், 2027 ஆகஸ்டிலும் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்குமாறு, மத்திய அரசுக்கு தமிழக அரசு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளது. இதுவரை எவ்வளவு மின்சாரம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்படவில்லை. மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை யூனிட், 8 ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக மின்தேவையை பூர்த்தி செய்ய மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், யூனிட், 4 - 5 ரூபாய்க்கு வழங்குமாறு, மத்திய மின்துறையை, தமிழக மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது. தற்போது, 1 யூனிட் மின்சாரம் சராசரியாக, 3.50 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை வாங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Bhaskaran
டிச 06, 2024 13:39

கூடங்குளம் ஸ்டெர்லிட் வைத்து அரசியல் வியாபாரம் பண்ணி பெரும் கோடீஸ்வரன் ஆனது வைகோ புத்திசாலித்தனமாகவும் பேசரார் தேனியில் 300 கோடி ரூபாய் செலவில் புது மில் வாங்கியிருப்பதாக செய்திகள் வந்தது வாழ்க


veeramani
டிச 06, 2024 11:29

உலகில் நிலக்கரி டீசல் போன்ற அழியக்கூடிய பொருட்களை வைத்து மின்சாரம் இனிமேலும் உற்பத்தி பண்ண முடியாது. எனவே சூரிய ஒளி மின்சாரம் காற்றாலை மின்சாரம் ஓரளவிற்கு சமாளிக்கலாம் அனுமின் சாரம் மட்டுமே சுய தேவையை பூர்த்திசெய்யும். சில உட்டாள்கள் கூடங்குளம் அணு உலை தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நரசிம்மராவு தீர்க்கதரிசனம் இப்போது தெரிகிறதா ஆனாலும் உற்பத்தி அனைத்தையும் தமிழ்நாட்டிற்கு தருவதில் அண்டை மாநிலங்கள் ஒப்புதல் தேவை


Sampath Kumar
டிச 06, 2024 11:03

திட்டமிட்டு அணு உலைகளை தமிழ்நாட்டில் அமைத்த அரசியல்வியாதிகளின் கள்ள மௌனம் இப்போ பல் இளிக்கிறது காவேரி நீரை கேக்க கூடாதாம் ஒரு சங்கி சொல்லுகிறது நெய்வேலி மின்சாரம் கர்நாடகாவிற்கு போகலாம் அதனில் தமிழ் நாட்டிற்கு என்ன ஆயின் என்று கேட்டால் வாயை திர்க மாட்டார்கள் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு இடங்களில் ஆறு அணு உலைகளை நிறுவ என்ன காரணம் / இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் உண்டா? யாரவது பதில் சொல்லுங்கள்


ghee
டிச 06, 2024 11:29

கொதடிமேயே தரமுடியாது...முடிந்தால் அணுஉலை உள்ளே சென்று போரட்ட்டம் நடத்து


hari
டிச 06, 2024 11:36

அரை வேக்காடு சம்பத்து...இது 1988 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ராஜிவ்காந்தி தொடங்கியது இது


V RAMASWAMY
டிச 06, 2024 10:02

கூடங்குளம் மின்சாரம் அனைத்தும் தமிழகத்துக்கே, கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி நீர் பூராவும் தமிழகத்துக்கே, தமிழகத்திலுள்ள அனைத்து நதி நீர்களும் தமிழகத்துக்கே, தமிழகத்து லாபங்கள் பூராவும், மணற்கொள்ளை உட்பட எங்களுக்கே. தமிழ் தவிர வேறு எந்த மொழியும் படிக்கக்கூடாது எங்களுக்கு தெரியாது என்கிற காரணத்தால். தமிழகத்தில் வேறு மாநிலத்தவர் வேலை தொழில் பார்க்கக்கூடாது, ஆனால் தமிழர்கள் பாரதம் பூராவும், உழைக்கவும் பூராவும் செல்லவேண்டும், அங்கு சென்று பணத்தை முதலீடு செய்யவேண்டும். பாரதத்தில் வேறு மாநிலமே கிடையாதா, அல்லது தமிழகம் மட்டும் பாரதமா? திராவிட மாடல் என்று தேவையற்று பீற்றிக்கொள்ளும் மாடல் என்பது இது தானா?


ஆரூர் ரங்
டிச 06, 2024 09:22

அப்போ அண்டை மாநிலங்களில் உருவாகும் ஆற்று நீரில் நாம் பங்கு கேட்க முடியுமா? மாநிலங்கள் மத்திய அரசின் தாற்காலிக கிளைகள் மட்டுமே.


sankaranarayanan
டிச 06, 2024 09:06

மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டத்தையும் உதறி தள்ளி விட்டு பிறகு அதில் பயனை மட்டும் கேட்டு அடைய அவர்கள் என்ன சும்பனா உங்களுக்கு கொடுக்க. மத்திய அரசு கொண்டுவரும் எல்லா திட்டங்களும் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் எல்லாருக்கும் அதில் பங்கு உண்டு என்ற எண்ணம் உதிக்க வேண்டும்


GMM
டிச 06, 2024 08:57

தமிழக மின் வாரியம் ஊழல் ஊதாரி செலவுகள் நிறைந்த வாரியம்? அணுமின் உலையை எதிர்த்து முன்பு போராடியது தவறுதானே. நீர் மின்சாரம், கற்றாலை மின் உற்பத்தி நன்கு கைகொடுக்கிறது. அதனை அண்டை மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்குமா தமிழகம். ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் செலவு? தமிழகத்தில் நிதி நிர்வாகம் புரிவது கடினம். கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு எந்த அடிப்படையில் கேட்டு கடிதம் எழுதுகிறார்கள். இது கூட்டாட்சிக்கு எதிர் தானே?


VENKATASUBRAMANIAN
டிச 06, 2024 07:51

முட்டாள்தனமான வாதம். இப்படி எல்லா மாநிலங்களுக்கும் கேட்க ஆரம்பித்தால் என்னவாகும். ஓட்டு அரசியல் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்


Venkateswaran Rajaram
டிச 06, 2024 09:21

சரியாக சொன்னீர்கள் இவர்கள் நாட்டையே கூறு போட்டு வேறு நாட்டுக்கு விற்றுவிடுவார்கள் ...ஏற்கனவே இரண்டு கலகங்களும் ஆட்சி செய்து மொத்த கஜானாவையும் காலி செய்து மேலும் நம் தலையை உலக வங்கியிடம் அடமானம் வைத்து கடன் வாங்கி அதில் திட்டம் போட்டு கொள்ளை அடித்து சென்று விட்டார்கள். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று நக்கல் வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்துள்ள திட்டங்களில் ஏதாவது ஒன்று டெண்டர் இல் உள்ளபடி தரத்துடன் செய்திருக்கிறோம் என்று சொல்ல முடியுமா ...அதுவும் சொல்லிவிடுவார்கள் ஒரு ஆய்வுக்குழு அமைத்து அவர்களை உலக தரத்தில் உள்ளது என்று சொல்ல வைத்து விடுவார்கள் .


Varadarajan Nagarajan
டிச 06, 2024 07:38

தமிழகத்தின் தற்போதைய மின் தேவையில் பாதியைகூட மின் வாரியம் உற்பத்தி செய்யவில்லை. வெளி மாநிலங்களிலிருந்தும் தனியாரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்து காலத்தை ஊட்டுகின்றது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு எந்த மின் உற்பத்தி திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இதுபோலத்தான் யாராவது வந்து முதலீடு செய்து திட்டங்களை தொடங்கினால் அதில் பங்கு மட்டுமல்ல முழுவதையுமே கேட்பார்கள். அதுவும் இவர்கள் சொல்லும் விலைக்கு. இந்த திட்டத்தை எதிர்த்து எத்தனை போராட்டங்களை நடத்தியவர்களை ஆதரித்தார்கள்


Indian
டிச 06, 2024 07:35

கிடைக்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை