உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் அருகே இறைச்சி கடைகள் அகற்ற வலியுறுத்தல்

கோவில் அருகே இறைச்சி கடைகள் அகற்ற வலியுறுத்தல்

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:கோவை, உடையாம்பாளையம், மாரியம்மன் கோவில் அருகே, மாட்டிறைச்சி பிரியாணி கடை அமைக்கப்பட்டது. ஊர் கட்டுப்பாடு மற்றும் கோவில் புனிதம் கருதி அதை அகற்றிக் கொள்ள, ஊர் பிரமுகர் சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் கடை உரிமையாளர், சில முஸ்லிம் அமைப்பினருடன், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம், 'சுப்பிரமணியம் எங்களை மாட்டுக்கறி பிரியாணி கடை நடத்தக்கூடாது என மிரட்டுகிறார்' என புகார் அளித்தார். எங்கெல்லாம் கோவில்களைச் சுற்றி, இது போன்ற அசைவ உணவு கடை, இறைச்சிக் கடை இருக்கிறதோ, அவற்றை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும்.கோவையில் நடந்த சம்பவத்தை கண்டித்த அப்பகுதியினர் கடையை அகற்றவும், சுப்ரமணியம் மீதான வழக்கை திரும்ப பெறவும் வலியுறுத்தி திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். சுப்ரமணியம் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜன 11, 2025 20:38

கோவில் எதிரே உள்ள சொரியார் சிலைகளையும் அகற்றவேண்டும். மேலும், கல்வி வளாகங்கள், மருத்துவமனைகள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை