உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெங்கு காய்ச்சல்: 922 பேர் பாதிப்பு

டெங்கு காய்ச்சல்: 922 பேர் பாதிப்பு

சென்னை:தமிழகத்தில் ஜன., மாதத்தில் இதுவரை 922 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று வாரங்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வரும் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள் குளிர் மற்றும் மழை காலங்களில் தீவிரமாக பெருக்கமடைகின்றன. கடந்தாண்டில் மட்டும் 9,121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 10 பேர் உயிரிழந்தனர்.பருவமழை காலமான, அக்., முதல் டிச., மாதம் வரை, 4,500க்கும் மேற்பட்டோருக்கு, டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.இந்நிலையில், ஜன., மாதம் துவங்கி, 17 நாட்களில், 922 பேர், டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், மூன்று வாரங்களில் கட்டுக்குள் வரும் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.-செல்வவிநாயகம்,இயக்குனர்,பொது சுகாதாரத் துறை

தினமும் 30 பேர் பாதிப்பு

மாநிலம் முழுதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளன. அதிக மழைக்கு உள்ளான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், வெள்ள மீட்பு பணிகளுக்கு பின், கொசுக்கள் வாயிலாக பரவும் நோய் தடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, சில நாட்களாக, டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்துள்ளது. இதற்கு முன், தினமும், 80 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, 30 ஆக குறைந்துள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்குள் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RADE
ஜன 18, 2024 10:58

ivanga pukai engum poduvathu illai


duruvasar
ஜன 18, 2024 10:22

மாசுவை கேளுங்கள் பகுதிக்கு இந்த செய்தியை அனுப்புங்கள். தக்க மறுப்பு செய்தி மற்றும் உண்மை நிலவரத்தையும் கூறுவார்.


Ramesh Sargam
ஜன 18, 2024 07:38

தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தாமதப்படுத்தினாலும், யாராவது இறந்தால் (யாரும் இறக்ககூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்), உடனே தாமதம் எதுவும் செய்யாமல் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துவிடுவார்கள் இந்த தீய திமுக அரசு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை